வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 27 டிசம்பர், 2009

அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களினால் ஆயுதங்களை ஏந்தி உயிரை மாய்த்துக்கொள்ள இருந்த எம்மைப் பாதுகாத்து அச்சமின்றி வாழும் சூழலை ஏற்படுத்தியவா; ஜனாதிபதியே


நிவாரண கிராமங்களிலுள்ளோர் விபரிப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினாலேயே தமது உயிரும், பிள்ளைகளும் பாதுகாக்கப்பட்டதுடன் தற்பொழுது அச்சமின்றி வாழும் சூழல் ஏற்பட்டுள்ளதாக இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் வாழும் மக்கள் தெரிவித்தனர்.

வெறுமனே உடுத்த உடையுடன் அச்சத்துக்கு மத்தியில் வந்த எமக்கு இன்று அரசாங்கம் சகல வசதிகளையும் செய்து தந்துள்ளது. இதற்காக நாங்கள் ஜனாதிபதிக்கு என்றும் நன்றிகூற கடமைப்பட்டுள்ளோம் என்றும் அவர்கள் கூறினார்கள்.

அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களினால் ஆயுதங்களை ஏந்தி உயிரை மாய்த்துக்கொள்ள இருந்த எம்மைப் பாதுகாத்து புனர்வாழ்வு வழங்கி சிறந்த எதிர்காலத்தை காண்பித்த ஒரே தலைவர் ஜனாதிபதி என்று பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வரும் 18 வயதுடைய கந்தையா சசிகுமார் தெரிவித்தார்.

வவுனியாவிலுள்ள நிவாரணக் கிராமங்களுக்கும், புனர்வாழ்வு நிலையங்களுக்கும் கொழும்பிலிருந்து ஊடகவியலாளர் குழுவொன்று கடந்த வாரம் அழைத்துச் செல்லப்பட்டது. இதன் போதே நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களும், புனர்வாழ்வு பெற்று வரும் இளைஞர், யுவதிகளும் இந்த கருத்துக்களை தெரிவித்தனர்.

கிளிநொச்சி, பூநகரியைச் சேர்ந்த 31 வயதுடைய செல்லையா விசியேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், உயிரையும், ஒரு சில உடுதுணிகளையும் தவிர சகலதையும் இழந்து வந்த எமக்கு இன்று எல்லா வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.

ஆறு மாத காலமாக எனது மனைவி, இரு குழந்தைகளுடன் இந்த கதிர்காமர் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளேன். எந்த பிரச்சினைகளும் இன்றி வாழ்கின்றோம். எம்மில் பலர் தற்பொழுதுதான் மிகவும் சிரித்த முகத் துடனும் சந்தோசத்துடனும் காணப்படு கின்றனர்.

இதற்கு பிரதான காரணம் தங்களது பிள்ளைகளை பிடித்துச் செல்ல எவரும் வரமாட்டார்கள். எமது பிள்ளைகள் எம் முடனேயே இருக்கின்றனர் என்பதனாலாகும் என்றார். புனர்வாழ்வு பெற்று வரும் கந்தையா சசிகுமார் கருத்துத் தெரிவிக்கையில், விளையாடுவதற்காக கிரிக்கெட் மட்டையை கையில் எடுக்க வேண்டிய நாம் இதுவரை துப்பாக்கிகளை ஏந்தி இருந்தோம்.

உலகில் எத்தனையோ விடயங்களை அனுபவிக்க வேண்டிய நாங்கள் உலகமே தெரியாதவர்களாகவும், எமது உறவுகளை பறிகொடுத்தவர்களாகவும் இருந்தோம். இன்று கணனி உட்பட தொழில் துறைக்கு தேவையான பல்வேறு பயிற்சிகள் எமக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் எமக்கு சிறந்த எதிர்காலம் உண்டு என்றும் குறிப்பிட்டார்.

புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு கணனி, தையல், மேசன், தொழிற் பயிற்சி போன்ற பயிற்சிகளும், குறைந்த வயதுள்ளவர்களுக்கும் கற்றல் வசதிகளும் செய்து கொடுக்கப் பட்டுள்ளன

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’