
சிறிலங்காவில் யுத்த நிலவரம் தீவிரமடைந்த போது ஆயுதங்களைக் கைவிடுவதாக அறிவித்ததன் பின்னர் வெள்ளைக் கொடியுடன் ராணுவத்தினரிடம் சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை விடுதலைப் புலிகளே பின்னாலிருந்து சுட்டுக் கொன்றதாக ஐ.நா சபைக்கான சிறிலங்கா தூதுவர் பாலித்த கோகன்ன தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் செய்திச் சேவையான ஏ எஃப் பீ க்கு அழித்த செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். புலிகளின் தலைவர்கள் சரணடைய வந்த தருவாயில் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் தமக்கும் புலிகளுக்கும் இடையே செய்திப் பரிமாற்றம் நிகழ்ந்ததாகவும் இதன்போது எந்தவித அச்சுறுத்தலும் காண்பிக்காது இராணுவத்தினரின் நிலைகளுக்கு வருமாறு தாம் அறிவுறுத்தியதாகவும் கோகன்ன தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்பாராத விதமாக புலிகளே பின்னாலிருந்து அவர்களை சுட்டுத் தீர்த்ததாகவும் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பா.நடேசன்இசமாதான செயலக பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் இறப்புக்கு புலிகளே காரணம் எனவும் கோகன்ன இந்த செவ்வியில் கூறியிருக்கிறார்.
புலித்தேவன், நடேசன் ஆகியோரின் உடல்களென இராணுவத்தால் காட்டப்பட்ட படங்களில் காணப்பட்ட துப்பாக்கிச் சூட்டு அடையாளங்கள் இதற்கு எதிர்மறையாக முன்னாலிருந்து சுடப்பட்டதாகத் தெரிவது குறிப்பிடத்தக்கது













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’