-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
சனி, 26 டிசம்பர், 2009
அரசாங்கம் சன்டே லீடர் பத்திரிகையுடன் இணைந்து சரத் பொன்சேகாவிற்கு எதிராக சதி முயற்ச்சி.
ஸ்ரீலங்கா அரசாங்கம் சன்டே லீடர் பத்திரிகையுடன் இணைந்து சரத் பொன்சேகாவிற்கு எதிராக சதி முயற்ச்சி ஒன்றை ஆரம்பித்துள்ளதாக எதிர் கட்சிக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
சரத் பொன்சேகாவிற்கு மக்கள் மத்தியில் ஆதரவை குறைப்பதற்காக அரசாங்கம் இவ்வாறான சதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சரத் பொன்சேகாசன்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியை மாற்றம் செய்து அரசாங்கத்தினால் அண்மையில் கொள்வனவு செய்யப்பட்ட தனியார் ஊடகம் ஒன்றில் அதனை ஒளிபரப்புவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அந்த செவ்வியில் கோத்தபாய ராஜபக்ச விடுதலைப்புலிகளின் அரசியல் துறை தலைவர்களை படுகொலை செய்யும் உத்தரவை வழங்கினார் என்று சரத் பொன்சேகா கூறுவது போல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 58 வது படையணியின் கட்டளை தளபதி சவீந்திர சில்வாவின் செவ்வியினை நாளைய தினம் வெளியிடுவதற்கும் சன்டே லீடர் பத்திரிகை தீர்மானித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரியின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக சரத் பொன்சேகாவிற்கு அபகீர்த்தியை ஏற்படும் வகையிலான் செய்திகளை வெளியிடவும் சன்டே லீடர் இணங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’