
ஈராக் நாட்டில் அன்பார் மாநிலத் தலைநகர் ரமாடி நகரில் மாநில கவுன்சில் சபையின் நுழைவு வாயிலில் ஒரு தீவிரவாதி உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்க வைத்ததில் அந்த கவுன்சில் சபை கட்டிடம் சேதம் அடைந்தது.
மாநில கவர்னர் குவாசிம் முகமது அந்த கவுன்சில் சபை கட்டிடத்தைச் சுற்றி பார்த்த போது 2ஆவது தீவிரவாதி மேலும் குண்டுகளை வெடிக்க வைத்ததில் அவர் படுகாயமடைந்தார். வைத்தியச்சலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த இரு தாக்குதல்களிலும் மேலும் 22 பேர் பலியானார்கள். 40 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் இன்று நண்பகலில் இடம்பெற்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’