
அரச நிறுவனங்களில் சட்டப்படி வேலை செய்யும் பேராட்டங்களில் முன்னின்று செயற்படுபவர்களை பதவியிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண ஆளுநரும் சிரேஷ்ட தொழிற்சங்கவாதியுமான அலவி மௌலானா தெரிவித்தார்.
போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் குறித்து அலவி மௌலானா எமது இணையத்தளத்திற்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பெற்றோலியக் கூட்டுத்தாபனம், துறைமுக அதிகாரசபை உள்ளிட்ட பிரதான அரச நிறுவனங்களின் ஊழியர்கள் தமக்கு நியாயமான சம்பள அதிகரிப்பை வழங்கக்கோரி சட்டப்படி வேலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்போராட்டத்தை இன்று முதல் நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன அழைப்பு விடுத்திருந்தன.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’