வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 13 நவம்பர், 2009

உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலில் பராக் ஒபாமா முதலிடம்


உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முதலிடத்தைப் பிடித்துள்ளார். இப்பட்டியலில் ஒபாமாவை விட 49 ரேங்குகள் மட்டுமே பின்தங்கியுள்ளார் தாதா தாவூத் இப்ராகிம்.

உலகின் மோசமான தாதாக்களி்ல ஒருவர் தாவூத் இப்ராகிம். மும்பை தொடர் குண்டுவெடிப்பு உட்பட பல சம்பவங்களில் அவருக்குத் தொடர்பு உள்ளது.

இவர் பாகிஸ்தானில் தொடர்ந்து தலைமைறவாக இருந்து வருகிறார். இந்நிலையில், உலகின் சக்தி வாய்ந்த நபர்கள் பட்டியலை 'போர்ப்ஸ்' இதழ் வெளியிட்டுள்ளது.

அதில் அமெரிக்க அதிபரை விட 49 ரேங்குகள் மட்டுமே பின்தங்கி உள்ளார் தாவூத். அதேசமயம், லட்சுமி மிட்டல், ரத்தன் டாடா ஆகியோரை விட தாவூத் சக்தி வாய்ந்த நபராகவும் இதில் வர்ணிக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பட்டியலில் தாவூத் இப்ராகிம் 50ஆவது இடத்தில் இருக்கிறார். பிரதமர் மன்மோகன் சிங் 36ஆவது இடத்திலும், மிட்டல் 55ஆவது இடத்திலும், டாடா 59ஆவது இடத்திலும் உள்ளனர்.

அல் கொய்தா தலைவர் பின் லேடன் 37ஆவது இடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் பராக் ஒபாமா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மும்பையைச் சேர்ந்த 'குற்ற கட்டமைப்பான டி கம்பெனியின் தலைவர் தாவூத் இப்ராகிம்' என்று போர்ப்ஸ் வர்ணித்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’