வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 20 நவம்பர், 2009

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்திராகாந்தி அமைதி விருது


பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 2009ஆம் ஆண்டுக்கான இந்திராகாந்தி அமைதி விருது வழங்கப்படவுள்ளது.

இந்திராகாந்தி நினைவு அறக்கட்டளை வழங்கும் இந்த விருதுக்கு பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான சர்வதேச தேர்வுக் குழு, ஹசீனாவைத் தேர்வு செய்துள்ளது.

பங்களாதேஷ் மக்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் வாழ்வு வளம்பெற ஏழ்மையை ஒழித்து, ஜனநாயகம் தழைத்தோங்கும் விதத்தில் பாடுபட்டதற்காக ஷேக் ஹசீனாவுக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது ரூ. 25 லட்சம் ரொக்கப் பரிசும், சான்றிதழும் கொண்டது. 1996-2001 வரை பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, கடந்த ஆண்டு டிசம்பரில் இரண்டாவது முறையாக பிரதமரானார்.

பங்களாதேஷில் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல், ஏழைகளுக்கு வீடு, சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல திட்டங்களை ஷேக் ஹசீனா அமுல்படுத்தி வருகிறார்.

"பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்கு நடந்து வந்த ஊடுருவல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், இரு நாடுகள் இடையே அமைதியை நிலைநாட்டவும் இவர் பல முயற்சிகள் எடுத்து வந்தார்" என இந்திரா காந்தி அறக்கட்டளை தெரிவித்துள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’