வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 11 நவம்பர், 2009

அகதிகளை பொறுப்பேற்க மறுக்கும் நியூஸிலாந்து


இந்தோனேசிய கடற்பரப்பில் ஓசன் வைக்கிங் எனப்படும் சுங்க கப்பலில் உள்ள இலங்கை அகதிகள் 78 பேரையும் அவுஸ்திரேலிய வேண்டுகோளுக்கிணங்க தன்னால் பொறுப் பேற்க முடியாதென நியூஸிலாந்து தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினை குறித்து தங்கள் அரசாங்கத்துடன் அவுஸ்திரேலியா பேசியதை உறுதிப்படுத்திய நியூஸிலாந்து குடிவரவு அமைச்சர் ஜோநாதன் கோல்மன், ஏற்கெனவே நியூஸிலாந்துக்குள் நுழைய முறைதவறி பாய்வதற்கு முயற்சி செய்வோரை சமாளிப்பதில் போதும் போதும் என்றாகிவிட்டது என்று கூறினார். அவுஸ்திரேலியாவை நோக்கி சென்று கொண்டிருக்கையில் கடலில் மூழ்கிய படகு ஒன்றிலிருந்து காப்பாற்றப்பட்டு 3 வாரங்களின் பின்னர் கரையிறங்க மறுக்கும் அகதிகள் இந்தோனேசிய தடுப்புக் காவல் முகாம் ஒன்றிலேயே விசாரிக்கப்பட வேண்டும். ஆனால், ஓசானிக் வைக்கிங் அகதிகளுடன் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதன் கடற்பரப்பிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அச்சொட்டாக ஆயிரக்கணக்கான அகதிகள் தரித்து நிற்கிறார்கள் என்று கோல்மன் தெரிவித்தார். ஓசானிக் வைக்கிங் கப்பலைப் போன்று ஒவ்வொரு சம்பவத்தையும் தனித்தனியாக அணுகுவதனால் உரிய பயன் கிடைக்கும் என்று நியூஸிலாந்து அரசாங்கம் நம்பவில்லை என்றும் அவர் கூறினார்.

இவ்வாறு நடந்து கொள்வது எதிர்காலத்தில் எழக்கூடிய இது போன்ற சம்பவங்களுக்கு தீர்வுகாண உதவமாட்டாது என்றும் நியூஸிலாந்து அமைச்சர் கோல்மன் தெரிவித்தார். நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, இலங்கை மற்றும் ஆசிய பசிபிக் பிராந்தியத்திலுள்ள 39 நாடுகள் கைச்சாத்திட்ட பல்தர திட்டமான பாளி முறைமையே, மக்கள் சட்டவிரோதமாக வேற்று நாடுகளுக்கு கடத்தப்படுவது மற்றும் படகு மக்கள் போன்ற பரந்த அளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சிறந்த வழியாகும் என்று தமது அரசாங்கம் நம்புவதாகவும் கோல்மன் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’