வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 17 நவம்பர், 2009

டில்சானின் அபார ஆட்டத்தால் இலங்கை வலுவான நிலையில்


சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்தியா அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அஹமதாபாத்தில் நடைப்பெற்று வருகின்றது. இதில் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவின் போது 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 385 ஓட்டங்களை பெற்றிருந்தது. டிராவிட் மற்றும் ஹர்பதான் களத்தில் இருந்தனர்.

இரண்டாம் நாளின் போது டிராவிட் 177 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க தொடர்ந்து வந்த வீர்ர்களும் சரியான முறையில் துடுபாட்டத்தில் பிரகாசிக்காமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 426 ஓட்டங்களை பெற்றனர்.

பதில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இரண்டாம் நாள் ஆட்டமுடிவின் போது 70 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 275 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுபாட்டத்தில், ஆரம்ப துடுபாட்ட வீரர்களாக களமிறங்கிய பரனவிதான மற்றும் டில்சான் 16.5 ஓவர்களில் 74 ஓட்டங்களை இனைப்பாட்டமாக பெற்றிருந்த போது பரனவிதான 35 ஓட்டங்களுடன் முதலாவது விக்கெட்டை பறிகொடுத்தார்.

தொடர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாடிய டில்சானுடன் 2 ஆவது விக்கெட்டுக்காக இனைந்து கொண்ட சங்ககாரவும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி இனைப்பாட்டமாக 107 ஓட்டங்களை பெற்றனர். டில்சான் 12 பவுன்டரிகள் அடங்கலாக 107 ஓட்டங்கள் பெற்றார். இதன் மூலம் 57வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடி, 3443 ஓட்டங்களை கடந்துள்ளதோடு இவர் பெறும் 9 ஆவது சதம் இதுவாகும். மேலும் சங்ககார, 31 ஓட்டங்களை பெற்று சகிர்கானின் பந்துக்கு டெண்டுல்கரிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

இலங்கை அணி 3 விக்கெட்டுகள் இழந்துள்ள நிலையில், சமரவீர 45 ஓட்டங்களுடனும், ஜேவர்த்தன 36 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இதனை தொடர்ந்து மூன்றாம் நாள் போட்டி நாளை அஹமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’