வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 24 நவம்பர், 2009

அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோருவோர் ஆட்கடத்தும் நபர்களுக்கு பணம் செலுத்துவதாக தகவல்


அவுஸ்திரேலியாவுக்கு தஞ்சம்கோரி வரும் அகதிகளில் பெரும்பாலானோர் ஆட்கடத்தும் நபர்களுக்கு பெருந்தொகையான பணம் கொடுப்பதாக தெரியவந்துள்ளது. அகதியாக வரும் ஒருவர் கிட்டத்தட்ட 40000 அமெரிக்க டொலர்களை கடத்தல்காரர்களுக்கு வழங்குவதாக The Australian பத்திரிகை இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடல்வழியில் மாத்திரமல்லாது போலி விமானப்பத்திரங்களைக் கொண்டு விமானத்திலும் அவுஸ்திரேலியாவுக்கு வருவதாகவும் 2008-2009 ஆண்டுக் காலப்பகுதியில் விமானத்தில் வந்த 2172 பேர் தஞ்சம் கோரியுள்ளதாகவும் அந்த இணையத்தளம் தகவல் தந்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இலங்கை அகதிகளில் ஒருவரான சஞ்சய் என்றழைக்கப்படும் நபர் படகில் செல்வதற்காக மலேசியாவில் ஆட்கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த ஒருவருக்கு 15000 அமெரிக்க டொலர்களை கொடுத்ததாக கூறியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது அவுஸ்திரேலிய குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’