வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 6 நவம்பர், 2009

தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து அமைச்சர் நந்தன குணதிலக்க விலகல்


தேசிய சுதந்திர முன்னணியில் அங்கம் வகித்த களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சுற்றுலாத்துறை அமைச்சருமான நந்தன குணதிலக்க தனது கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.

கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் செயற்குழு கூட்டணியிலிருந்தும் ராஜிநாமா செய்வதாக, உத்தியோகபூர்வமாகக் கட்சியின் தலைமைப் பீடத்துக்கு அறிவித்துள்ளதுடன் தேர்தல் ஆணையாளருக்கும் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அமைச்சர் நந்தன குணதிலக்கவின் பிரத்தியேக செயலாளரும் தேசிய சுதந்திர முன்னணியிலிருந்து விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் விடுதலை முன்னணியில் அங்கம் வகித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அக்கட்சியுடன் ஏற்பட்ட முறுகல் காரணமாக பிரிந்து சென்று தேசிய சுதந்திர முன்னணியை ஸ்தாபித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’