
நலன்புரி முகாம்களில் ஒருவாரத்திற்கு முன்னர் 1 இலட்சத்து 43 ஆயிரத்து 161 பேரே இருந்தனர் அத்தொகை இன்று 1 இலட்சத்து 36 ஆயிரத்து 328 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஒருவாரத்திற்குள் 6833 பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். மீதமிருப்போரில் பெரும்பாலானோர் 71 நாட்களில் மீள்குடியேற்றப்படுவர் என்று மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். மீள் குடியேற்ற நடவடிக்கை மிக மிக மந்தமான கதியிலேயே முன்னெடுக்கப்படுகின்றது என்று விமர்சித்தோர் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்டு வியந்து பெருமை கொள்கின்றனர் என்றும் அவர் சொன்னார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மோதல்களால் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் இன்று (நேற்று) வரையிலும் 1 இலட்சத்து 36 ஆயிரத்து 238 பேர் மட்டுமே இருக்கின்றனர். வவுனியாவிலுள்ள முகாம்களில் 127495 பேரும் , யாழ்ப்பாணத்தில் 2034 பேரும், மன்னாரில் 970 பேரும், திருகோணமலையில் 2762 பேரும் 7 வைத்தியசாலைகளில் உறவினர்களுடன் 3067 பேரும் இருக்கின்றனர்.
முகாம்களில் ஒரு வாரத்திற்கு முன்னர் 143161 பேர் இருந்தனர் இன்று அந்த எண்ணிக்கை 136328 ஆக குதைறந்துள்ளது. மக்கள் அவர்களது சொந்த கிராமங்க—ளிலேயே மீளக்குடியமர்த்தப்படுகின்றனர் அந்த நடவடிக்கையை துரிதப்படுத்தவேண்டுமாயின் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை இன்னும் துரிதப்படுத்த வேண்டும்.
மீள் குடியேற்ற நடவடிக்கை தொடர்பில் பல்வேறு கருத்துக்களை கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான பணிகளுக்கான உதவிச் செயலாளர் ஜோன் ஹோம்ஸ் உள்ளிட்ட தூதுவர்களும் வெளிநாட்டு அதிகாரிகளும் மீள்குடியேற்ற பணிகளை கண்டு பெருமைகொள்கின்றனர் இது நாட்டின் கீர்த்திக்கும் புகழுக்கும் கிடைத்த கௌரவமாகும்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’