
பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கிடையிலான 20 ஓவர்களை கொண்ட போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நேற்று மும்பையில் பகலிரவு ஆட்டமாக நடை பெற்ற இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி பாகிஸ்தான் அணியை முதலில் துடுப்பெடுத்தாடும் படி கேட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ஓட்டங்களை பெற்றது.
இதில் இம்ரான் நசிர் 38 பந்துகளில் 4 சி;க்சர்கள், 5 பவுன்டரிகள் அடங்கலாக 58 ஓட்டங்களை பெற்றார். இதன் மூலம் 20 ஓவர்களை கொண்ட ஒருநாள் தொடரில் இவர் பெறும் இரண்டாவது அரைச்சதம் இதுவாகும். நியுசிலாந்து அணி சார்பாக பந்து வீசிய சேன் எட்வேட் 4 ஓவர்களுக்கு 17 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
162 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிய நியுசிலாந்து அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது. நியுசிலாந்து அணி சார்பாக வீரர்கள் துடுபாட்டத்தில் சரியாக பிரகாசிக்காமையே தோல்விக்கு காரணமாகும். பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியிருந்தனர். மேலும் சிறப்பாக பந்து வீசிய அப்துல் ரசாக் 3 ஓவர்களில் 9 ஓட்டங்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்;. போட்டியின் ஆட்டநாயகனாக இம்ரான் நசீர் தெரிவு யெ;யப்பட்டதோடு அடுத்த போட்டி நாளை துபாயில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’