
தான்சானியாவின் கிளிமாஞ்சாரோ மலைப்பகுதியில் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி 11 குழந்தைகள் உட்பட 20 பேர் பலியானதாக அந்நாட்டு அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பலியான குழந்தைகள் 3 வயது முதல் 11 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 5 பேர் நிலச்சரிவில் சிக்கி உள்ளதாகவும், அவர்களை மீட்கும் பணி தீவரமாக நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.
தான்சானியாவில் இன்னும் சில தினங்களில் பருவ மழை ஆரம்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’