வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 9 அக்டோபர், 2009

கொழும்பு வெள்ளவத்தையில் போலி கிறடிற்காட் கும்பல் கைது!


கொழும்பு வெள்ளவத்தையில் போலி கிறடிற்காட் தயாரித்த கும்பல் ஒன்றை குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்ட இவ் நபர்களிடம் இருந்து நவீன ரக பிறிண்ரிங் சாதனம், போலி கிறடிற்காட் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக ஏ.எஸ்.பி. செனக குமாரசிங்க தெரிவிக்கையில் புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ள இவர்கள் திட்டமிட்ட முறையில் மோசடியில் ஈடுபட்டுவருபவர்கள். கைது செய்யப்பட்டுள்ள நபர்கள் இருவரில் ஒருவர் கட்டிட பொறியிலாளர் என்றும் மற்றையவர் கட்டிட மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தவர் என்றும் இவர் 40,000 ரூபா வரை மோசடி மூலம் பெற்றுள்ளனர்.

125 போலி கிறடிற்காட்இ அச்சு இயந்திரம், கையடக்க கணனிகள்-2, அலுவலக கணனிகள்-2 என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன். மோசடி கிறடிற்காட்டுக்குரிய வங்கி ரகசிய குறிப்புகள் பிரித்தானியாவில் உள்ள வங்கிகளில் இருந்து பெறப்பட்டவை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’