வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 16 அக்டோபர், 2009

அதர்மம் ஒழிந்தாலும் தர்மம் நிலை நாட்டப்படவில்லை-தீபாவளி வாழ்த்துச் செய்தியில் கிழ.மா.முதலமைச்சர்


தீபத் திருநாளானது வெறுமனே பட்டாசு கொளுத்தி வேடிக்கை கொண்டாடும் ஒரு கேளிக்கை நிகழ்வு அல்ல. அனைத்து மக்களுக்கும் மிகப் பெரும் தத்துவத்தைப் பறைசாற்றுகின்றது.அதர்மம் அழிந்து தர்மம் எப்போதும் வெல்லும் என்ற பொய்பிக்காத தத்துவம் அது .

எமது சமூகத்தைப் பொறுத்தவரை தமது சுயநலன்களுக்காக செயல்பட்டு மக்களின் நலன்களை மதியாத அடைக்குமுறைக்கு உட்படுத்திய பல அதர்மவாதிகள் அழிந்து விட்டார்கள் .இருந்த போதிலம் இம் மக்களின் துயரங்கள் இன்னமும் முழுமையாக துடைக்கப்படவில்லை." என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தனது தீபாவளி வாழத்து செய்தியில் தெரிவித்துள்ளார். அச்செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது."போர் முடிவடைந்து விட்ட போதிலும் தமிழ் மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வு காணப்படவில்லை.

"அதர்மம் ஒழிந்து தர்மம் நிலை நாட்டப்பட்ட இந் நன்நாளில் தீபத் திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் என் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதில் மட்டற்ற ஆனந்தம் அடைகின்றேன்.

மழை நின்றாலும் தூறல் நின்றபாடில்லை என்பது போல யுத்தம் முடிந்துவிட்டபோதிலும் தமிழ் மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.

இத்தீபத் திருநாளானது அல்லல் படுகின்ற எமது மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவதுடன் அரசியல் ரீதியான உரிமைக்காக ஏங்கி நிற்கும் எம் சமுதாயத்திற்கு நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைத்திட வாய்ப்புக்கள் பிறக்கட்டும். மனங்களில் மாறுதல் உண்டாகட்டும் என பிரார்த்திக்கின்றேன்."என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தனது தீபாவளிச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’