வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 11 அக்டோபர், 2009

சம்மாந்துறையில் கடத்தப்பட்ட குடும்பஸ்தர் குறித்து தகவல் இல்லை


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள வீரச்சோலையில் சிவில் மற்றும் சீருடையில் வந்தவர்களினால் விசாரணைக்கு என அழைத்துச் செல்லபபட்டதாகக் கூறப்படும் குடும்பஸ்தரொருவர் பற்றி தகவல்கள் இல்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

சிந்தாத்துரை இராசையா (வயது 45) என்ற குறிப்பிட்ட குடும்பஸ்தர் தொடர்பாக பொலிஸில் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளதோடு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சோமசுந்தரம் புஸ்பராஜாவின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு பொலிஸ் சீருடையிலும் ,சிவில் உடையிலும் வந்தவர்களினால் இவர் வாகனமொன்றில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், மறு நாளான நேற்று சனிக்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திலும் ,வீரச்சோலை பொலிஸ் காவல் நிலையத்திலும் சென்று விசாரித்த போது அப்படி யாரையும் அழைத்து வரவில்லை என அங்கு பதிலளிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் மாகாண சபை உறுப்பினர் சோமசுந்தரம் புஸ்பராஜாவிடம் தெரிவித்துள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’