வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 16 அக்டோபர், 2009

பசுமை அபிவிருத்தி கிராமமாக கிழ.மாகாணத்தில் பாவற்கொடிச்சேனை தெரிவு


மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமான பாவற்கொடிச்சேனை கிராமம் கிழக்கு மாகாண சபையினால் மாகாண பசுமையான கிராமமாக அபிவிருத்தி செய்ய தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் இவ்வாறான மூன்று பசுமையான முன்மாதிரி கிராமங்கள் உருவாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக நேற்று வவுணதீவு பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற இது தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கூறினார்.

பாவற்கொடிச்சேனை கிராமத்தில் இத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து பிரதேச சபை உறுப்பினர்கள் ,பிரதேச செயலக அதிகாரிகள் ,கிராமிய , சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

வீடமைப்பு ,வீதி அபிவிருத்தி ,கல்வி ,சுகாதாரம் ,போக்குவரத்து என பல்வேறு துறைகளில் இக் கிராமத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்திகள் தொடர்பாக ஆலோசனைகளை முதலமைச்சர் இக்கூட்டத்தில் கேட்டறிந்து கொண்டார்..

ஒரு வருட காலத்திற்குள் 10 கோடி ரூபா செலவில் முதற்கட்ட பணிகளை ஆரம்பித்து பூர்த்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், இத் திட்டமானது 5 வருட திட்டம் என்றும் முதலமைச்சர் இது தொடர்பாக கூறினார்.

இங்கு உரையாற்றிய முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் "கடந்த கால யுத்த சூழலில் எல்லைக் கிராமங்களே மிகவும் பாதிக்கப்பட்டன.இந் நிலையில் எல்லைப் கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் " என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’