வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 29 அக்டோபர், 2009

இலங்கை மார்க்கமாக இந்தியாவின் தென்பகுதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது - வைகோ எச்சரிக்கை


இலங்கை மார்க்கமாக இந்தியாவின் தென்பகுதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை விரைவில் மீள்குடியமர்த்தக் கோரியும், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்தும், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இராமேஸ்வரத்தில் நடந்த பிரசார பயண ஆரம்ப விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் முகாம்களுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை விடுவிக்க வேண்டும் என பொய்யான நாடகம் ஆடி இந்திய அரசும், தமிழக அரசும் தமிழர்களை திசைதிருப்ப பார்க்கின்றன. புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைக்கு சீனாவும், பாகிஸ்தானும் உதவின.

இப்போது இலங்கையில் துறைமுகம் அமைக்க சீனா முற்படுகிறது. இதனால், இலங்கை மார்க்கமாக இந்தியாவின் தென்பகுதிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் தினமும் தாக்கப்படுகின்றனர். இந்திய கடற்படை ஒரு முறையாவது அவர்களை விரட்டி அடித்துள்ளதா? என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’