வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 20 அக்டோபர், 2009

ஜனாதிபதி இன்று திருகோணமலை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு பாலங்களை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

கடலுக்கு குறுக்காக சுமார் 396 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் கொண்டதாக அமைக்கப்பட்ட சீனன்குடா கிண்ணியா பாலம் மற்றும் சுனாமி புனரமைப்புத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இறக்காக்கணடி புல்மோட்டைப் பாலம் ஆகியனவே ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்ட புதிய பாலங்களாகும்

கிண்ணியா சீனன்கடா பாலம் அமைப்பதற்காக சவுதி அரேபிய அரசாங்கம் 789 மில்லியன் ரூபாயையுமு; , புல்மோட்டை இறக்காகண்டி பாலம் அமைப்பதற்காக ஸ்பெயின் அரசாங்கம் 713 மில்லியன் ரூபாவையும் நிதி உதவியாக வழங்கியது

இலங்கையில் மிக நீளமான பாலம் என கருதப்படும் கிண்ணியா சீனன்குடா பாலம் கடலுக்கு குறுக்காக அமைக்கப்பட்ட முதலாவது பாலமாகும்

இந் நிகழ்வுகளில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ,மத்திய அமைச்சர்கள் டி.பி.ஏக்கநாயக்கா . டபிள்யு.பி. ஏக்கநாயக்கா ,எம்.என்.அப்துல் மஜீத் ,விநாயகமூர்த்தி முரளீதரன் ,சுசந்த புஞ்சிநிலமே ,ஏ.எல்.அதாவுல்லா ,எஸ்.எச். அமீர் அலி மற்றும் மாகாண அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ,எம்.எஸ். உதுமா லெப்பை ,துரையப்பா நவரட்ணராஜா உட்பட பலரும் கலந்து கொண்டனர்

இந் நிகழ்வுகளின் பின்பு பொது மக்கள் மத்தியில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

"இந் நாட்டில் இனவாத அரசியலுக்கு இனிமேல் இடமில்லை.சகலரும் இந் நாட்டு மக்களே. தற்போது கிடைத்துள்ள வெற்றியை மக்கள் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந் நாடு ஒரு அழகான தேசம் ஒரே தேசியக் கொடியின் கீழ் நாட்டை கட்டியெழுப்புவோம் " என்றார்.

இந் நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயத்திற்கு விஜயம் செய்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ப+சை வழிபாட்டிலும் கலந்து கொண்டார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’