தென் கிழக்கு ஈரானில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலொன்றில் ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையைச் சேர்ந்த அநேக உயர்மட்ட கட்டளைத் தளபதிகள் பலியாகியுள்ளனர். சிஸ்டான்பலுசிஸ்டான் மாகாணத்தில் இடம்பெற்ற இத்தாக்குதலில் குறைந்தது 29 பேர் பலியானதுடன் பலர் காயமடைந்துள்ளனர். பிராந்திய மலைப் பிரதேச தலைவர்களை சந்திப்பதற்காக பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்ற வேளையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் உரிமை கோரவில்லை. மேற்படி குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற மாகாணத்தில் செல்வாக்குப் பெற்றுத் திகழும் ஜுன்டால்லாஹ் போராளி குழுவே இத்தாக்குதலுக்கு காரணமென குற்றஞ்சாட்டப்படுகிறது.
இத்தாக்குதலில் இறந்தவர்களில் புரட்சிகர காவல் படையின் மாகாண தலைமை கட்டளைத் தளபதி ரஜாப் அலி மொஹமட்ஸாடெஹ் மற்றும் காவற்படையின் பிரதி கட்டளைத் தளபதி ஜெனரல் நூர் அலி ஷýஷ்தாரி ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இந்நிலையில் பாராளுமன்ற கூட்டத்தில் உரையாற்றிய சபாநாயகர் அலி லாரிஜானி, ""இந்தப் படுகொலைகளுக்கு எமது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இத்தாக்குதல் சிஸ்டான்பலுசிஸ்தான் மாகாணத்தின் பாதுகாப்பை சீர்குலைப்பதே பயங்கரவாதிகளின் நோக்காக உள்ளது என்பதை எடுத்துக் காட்டுகிறது'' என்று கூறினார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’