வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 3 அக்டோபர், 2009

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில்

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ் மாணவன் தமிழ்ப்பிரிவில் முதலாமிடம் வவுனியா மாணவன் இரண்டாமிடம்
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் தமிழ்ப்பிரிவில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியைச் சேர்ந்த லோகேஸ்வரன் சிறிஹர்ஷன் என்ற மாணவன் 192 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பண்டாரிகுளம் விபுலானந்தா மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த சச்சிதானந்தம் கெளரீசன் என்ற மாணவன் 191 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.

இந்தப் பாடசாலையில் 58 மாணவர்கள் இந்தப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளைஇ இறம்பைக்குளம் மகளிர்மகாவித்தியாலயத்தில் 82 மாணவர்களும்இ சைவப்பிரகாசா மகளிர் மாகாவித்தியாலயத்தில் 42 மாணவர்களும்இ தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 34 மாணவர்களும் , நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலயத்தில் 10 மாணவர்களும் , பூந்தோட்டம் மகாவித்தியாலயத்தில் 6 மாணவர்களும் , சிதம்பரபுரம் சிறிநாகராஜா வித்தியாலயத்தில் 5 மாணவர்களும் , செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் 4 மாணவர்களும் , தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் 3 மாணவர்களும் , இயங்கராவூர் , தாலிக்குளம் ஆகிய பாடசாலைகளில் தலா 2 மாணவர்களும் இந்தப் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’