
18,000 தொன் எடையுடன் இந்தியக் கடற்பரப்பில் பயணித்த பிரான்ஸ் நாட்டு கடற்படைக் கப்பல் சோமாலிய கடற்கொள்ளையர்களின் தாக்குதலிற்கு இலக்காகியுள்ளது.
160 மீற்றர் நீளமுடைய பிரான்ஸ் கடற்படைக் கப்பலான 'த குறூ ஒப் லா சோமே' மீது சோமாலிய கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர்.
சிறிய ரக ஆயுதங்களுடன் இரு படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள் இக் கப்பலை வர்த்தகக் கப்பல் என எண்ணி கொள்ளையிடும் நோக்கத்துடன் முன்னேறி தாக்கியுள்ளனர். ஐந்து கடற்கொள்ளையர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர் என பேச்சாளர் அட்மிரல் கிரிஸ்டோபி பிரசுக் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தாங்கள் தவறுதலாக தாக்கியது கடற்படை கப்பல் என அறிந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச்செல்ல முற்பட்டுள்ளனர். எனினும் அவர்களை துரத்திய கடற்படையினர் ஒரு படகில் இருந்த கொள்ளையர்களை மட்டும் கைது செய்துள்ளனர். அச்சமயம் மற்ற படகில் வந்த கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பாரிஸில் வைத்து அட்மிரல் கிரிஸ்டோபி பிரசுக் தெரிவித்துள்ளார்













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’