
நீர்கொழும்பு திம்ரிகஸ்கட்டுவ பகுதியைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் கைக்குண்டொன்றை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இப்பகுதியைச் சேர்ந்த சிசிர என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைக்குண்டொன்றை எடுத்துக்கொண்டு தனது மனைவியின் வீட்டுக்கு அருகில் சென்றவர், அதனை வெடிக்க வைத்துள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவருக்கும் வெளிநாட்டிலிருந்து வந்த மனைவிக்குமிடையில் ஏற்பட்ட மனகசப்பே தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’