வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

ஈழத்து சமையல்


பொரிச்ச மிளகாய் சம்பல்

நீண்ட நாட்களாக யாரையும் இந்த பக்கம் காணவில்லை.

அதான் சும்மா ஒரு விளையாட்டு சமையல் குறிப்பு.

ஈழத்து முற்றத்திலை மணிமேகலை ஆச்சி மாங்காய் சம்பல் செய்முறை போட்டிருக்கிறா.

அந்த செய்முறைக்கும் இதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. உரலிலை இடிக்கிறது.

தேவையான பொருட்கள்

1. செத்தல் மிளகாய் - 8 (அல்லது உங்களால் தாங்க கூடிய காரத்துக்கு ஏற்ற அளவு)
2. தேங்காய் பூ - ஒரு பாதி தேங்காய் துருவி எடுத்தது/ காய்ந்த தேங்காய் பூ எனில் 1 கப்
3. உப்பு - தேவைக்கு ஏற்ப
4. சின்ன வெங்காயம் - 4 அல்லது 5
6. நற்சீரகம் - ஒரு தேக்கரண்டி
7. கறிவேப்பிலை - ஒரு நெட்டு
9. எண்ணேய் - 2-3 மேசைகரண்டி
10. எலுமிச்சை - பாதி அல்லது பிசந்த பழப்புளி 2 மேசைகரண்டி

10- உரல்,உலக்கை; இல்லாவிட்டால் (food processor)









செய்முறை

1. பொரிக்கும் சட்டியை அடுப்பில் வைத்து எண்ணையை விட்டு சூடக்கவும்.
2. சூடான எண்ணேயில் செத்தல் மிளகாயை போட்டு பொரித்து எடுக்கவும் (கருகது எடுப்பது முக்கியம்)
3. அதே எண்ணேயில் நற்சீரகம், கறிவேப்பிலையையும் போட்டு பொரித்து எடுக்கவும்.



4. வெங்காயத்தை தோல் உரித்து எடுத்து கொள்ளவும்
5. பொரித்த மிளகாயை உரலில் இட்டு பொடியாக்கவும்,
6. பொடியாக்கிய மிளகாயுடன், சீரகம், உரித்த வெங்காயம், பொரித்த கறிவேப்பிலை, உப்பு என்பவற்றை சேர்த்து நன்கு பொடியாக்கவும்
7. பொடியாக்கிய கலவையுடன் துருவி வைத்த தேங்காய் பூவை இட்டு நன்கு இடித்து, இறுதியில் எலுமிச்சை அல்லது பழப்புளி கலந்து இடித்து உரலில் இருந்து எடுத்தால் சுவையான பொரிச்ச மிளகாய் சம்பல் தயார்.

இதனை ரொட்டி, தோசை என்பவற்றுடன் உண்ணலாம்.










உடன் தேங்காய்ப்பூ கிடைக்காவிட்டால்

* 1 கப் உலர்ந்த தேங்காய்பூவுக்கு 1/2 கப் நீர் சேர்த்து 30 செக்கன் மைக்கிரோ வேவ் அவனில் வைத்து பாவிக்கலாம்.
** உரல் உலக்கை இல்லாவிட்டல் Food processor இல் மேலே சொன்ன ஒழுங்கில் போட்டு அடித்து எடுத்தால் கிட்ட தட்ட இதே போல சம்பல் கிடைக்கும்.

வாரதிட்டம் 1: தயிர் செய்முறைகள்

உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,

பேச்சுவாக்கில் ஆரம்பித்த எங்களது கூட்டு வலைப்பதிவும், வாரதிட்டமும் இத்தனை தூரம் சிறப்பாக அமைந்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி. வாரதிட்டம் அறிவித்ததிலிருந்து மிகவும் ஆர்வமாக பங்கேற்றவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம். பங்கேற்றவர்கள் சிலரே எனினும், அவர்களுக்கு ஊக்கம் கொடுத்தவர்கள் பலர். அவர்களுக்கும் அடுத்த நன்றிகள். அடுத்து வரும் வாரங்களிலும் உற்சாகத்துடன் பங்கேற்று ஒருவருக்கொருவர் புதிய செய்முறைகளை அறிமுகம் செய்ய வேண்டும்.



இனி இந்த வார திட்டத்திற்கான தயிர் பற்றி சில தகவல்களும், தயிர் செய்முறைகளும் இதுவரை கூட்டுப்பதிவில் இணைந்தவர்களை பற்றிய ஓரிரு வார்த்தைகளும்:

தயிர் எனும் பதார்த்தம் பாலை திரிய வைத்து கிடைப்பது என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமே. பாலை திரிய வைப்பதற்காக தேசிகாள்புளி/எலுமிச்சை சாறு, வினாகிரி உபயோகப்படுத்த படுகின்றது. இவற்றை விட முன்னர் செய்து வைத்திருக்கும் தயிரே போதுமானது கூட. ஊருக்கு செல்லும் நேரங்களில் அப்பாச்சி இந்த முறையில் தான் தயிர் செய்வதை அவதானித்திருக்கின்றேன்.

தயிரை இரவு நேரங்களிலும், குளிர்/பனி நேரங்களிலும் சாப்பிடுவது நல்லதல்ல. எங்கள் முன்னோர்கள் மோரை தான் அதிகம் உண்டு வந்தார்கள் என படித்த நினைவு உண்டு. தயிரில் உள்ள சில குறைபாடுகள் தான் இதற்கு காரணம் என நினைக்கின்றேன். அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகிவிடும் என்பார்கள். தயிர்மட்டும் விதிவிலக்கா!

ஈழத்தில் தயிரை சைவ உணவு உண்ணும் வேளைகளில் (பகலில்) மறக்காமல் பார்க்கலாம். சாதத்துடனும், காய்கறி கறிகளுடனும் சேர்த்து உண்பார்கள். சிலர் சாதத்துடன் தயிரையும் சீனியையும் (சக்கரை) கலந்து உண்பார்கள். தயிரை மண்சட்டிகளில் பாதுகாப்பார்கள்.

தென்னிந்தியாவிற்கு நான் பயணித்த நேரத்தில், உணவு வேளையில் இறுதியாக தயிரை உண்பதை கவனித்துள்ளேன். உணவகங்களில் கூட தயிரை மறக்காமல் பரிமாறுவதை கவனித்தேன்.

தென்னிந்தியாவில் ஒருவர் ஒரு வேளை உட்கொள்ளும் தயிரின் அளவை ஒப்பிடும் போது, ஈழத்தில் ஒருவர் உட்கொள்ளும் தயிரின் அளவு மிகவும் குறைவே. தொட்டுக்கொள்ள ஊறுகாய் போலவே தயிரை உபயோகிப்பார்கள். (சிலர் தயிர் சட்டியையே விழுங்குவதை நான் குறிப்பிட விரும்பவில்லை ;)

இது தவிர இரு நாட்டவரும் தயிரை முதன்மை செய்முறை பொருளாக கொண்டு பல உணவு வகைகளை சமைத்து உட்கொண்டு வருகின்றார்கள். அவற்றுள் சிலவற்றை தான் இந்த பதிவில் பார்க்க போகின்றோம்.

புதுகை தென்றல் வலைப்பூவில் திட்டத்தை அறிவித்த உடனேயே சமையல்கட்டிற்கு சென்றிருப்பார் போல. உடனேயே அவர் சமைத்து, ரசித்து எங்களுடன் பகிர ஆசைப்பட்ட செய்முறையை முதலில் பார்க்கலாம்.

கடி பக்கோடி

அடுத்து எங்கள் வாரதிட்டத்தை தற்செயலாக பார்த்து, ஆர்வத்துடன் எங்களுடன் இணைந்த சின்னு டேஸ்டி அவர்களுடைய செய்முறை. சகோதரியை அன்புடன் வரவேற்போம்.
தயிர் அவல்

சின்னுவை போலவே வலைப்பூவில் புதிதாக ஆரம்பித்த தெய்வசுகந்தியும் ஆர்வத்துடன் திட்டத்தில் பங்கெடுத்தார். தன் முதல் பதிவையே திட்டத்திற்காக எழுதியுள்ளார். சகோதரியை வாழ்த்து வரவேற்போம்.


கேரட் தயிர் குழம்பு


அடுத்த பதிவு வி.ஜே. சந்திரன் அவர்களுடையது. அடிக்கடி சுவாரசியமாக செய்முறைகளால் எங்கள் அனைவரையும் மகிழவைக்கும் சந்திரன் அவர்களுடை தயிர் செய்முறையை பார்க்கலாம்.

சுட்ட கத்தரிக்காய் சம்பல்

அடுத்து சகோதரி சித்ரா அவர்கள் என்னை தனிமடலில் தொடர்பு கொண்டு, தானும் திட்டத்தில் இணைந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக அறிவித்தார். சகோதரி பல இடங்களில் செய்முறைகள் எழுதி பிரபலமானவர். குறிப்பாக அறுசுவையை சொல்லலாம். வந்த உடனேயே எங்களுக்காக மூன்று தயிர் செய்முறைகளை தந்திருக்கின்றார். சித்ரா அவர்களை வாழ்த்தி வரவேற்கின்றோம்.

காரட் தயிர் பச்சடி
சேமியா தயிர் கிச்சடி தயிர் வடை

அடுத்தது எங்கள் அன்பின் நானானி அவர்களுடைய செய்முறை. தமிழ் சமையல் வலைப்பூ திரட்டியிலேயே செய்முறையை பகிர்ந்து கொண்டுள்ளார்.

தயிர் மோர்மிளகாய் 

இறுதியாக தூயாவின் சமையல்கட்டில் இருந்து இரண்டு செய்முறைகள்.
தயிர் சேமியா
படத்தில் இருப்பது தயிர் சேமியா அல்ல ;)

தயிர் சலட்


முதல் வாரத்திலேயே அருமையான பதிவர்கள் சுவையான செய்முறைகளுடன் தமிழ்சமையல் வலைப்பூ திரட்டியை அலங்கரித்துள்ளார்கள். வரும் வாரங்களில் இந்த பங்களிப்பு தொடர்ந்து வரும் என எதிர்பார்க்கின்றோம். மேலும் பலர் ஊக்கத்துடன் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம். முதல் வாரத்தை வெற்றிவாரமாக்கிய அனைவருக்கும் நன்றிகள். 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’