வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 9 செப்டம்பர், 2009

அமெரிக்கா கொடுமைப்படுத்திய கைதிகள் பற்றிய ஆவணங்கள் : நீதிமன்றில் அம்ரீத் விவாதம்


ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் பிடிபட்ட சிறைக் கைதிகளைக் கொடுமைப்படுத்தியது தொடர்பான ரகசிய ஆவணங்களை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் மகள் அம்ரீத் சிங், அமெரிக்க நீதிமன்றில் வாதாடி பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தானில் கைது செய்யப்பட்ட கைதிகள் குவான்டனாமோ சிறையிலும், ஈராக்கில் கைது செய்யப்பட்ட கைதிகள் அபூ கிரெய்ப் சிறையிலும் அடைக்கப்பட்டு அமெரிக்க இராணுவத்தினரால் பல்வேறு சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டனர். இது தொடர்பாக அமெரிக்கப் புலனாய்வு நிறுவனங்களான எப்.பி.ஐ., சி.ஐ.ஏ. போன்றவை பதிவு செய்த ஆவணங்கள் மற்றும் வீடியோ ஒளிநாடாக்களை ஒப்படைக்கும்படி அமெரிக்க மனித உரிமை இயக்கம் நீண்ட நாட்களாகக் (ஏ.சி.எல்.யூ.) கோரி வந்தது.கியூபா நாட்டுக்கு அருகே உள்ள குவான்டனாமோ மற்றும் அபூ கிரெய்ப் சிறைகளில் கைதிகள் கொடுமைப்படுத்தப்பட்ட அனைத்து விவரங்களையும் கையளிக்கும்படி அமெரிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, ஏ.சி.எல்.யூ. இயக்கத்தின் அமெரிக்க வக்கீலான அம்ரீத் சிங், நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். சிறைக் கைதிகளுக்கு நேர்ந்த கொடுமை, காவலில் இறந்த கைதிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை போன்ற தகவல் அனைத்தையும் அறியும் உரிமை சட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும் என ஏ.சி.எல்.யூ., நீண்ட நாட்களாக் கோரி வந்தது.இந்த அமைப்பின் சார்பில் அம்ரீத் சிங்கும், கனடா நாட்டைச் சேர்ந்த ஜமீல் ஜாபரும் நீதிமன்றத்தில் வாதாடி, ஒரு லட்சத்து 30 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்களைப் பெற்றுள்ளனர்.இந்த ஆவணங்களை அரசிடமிருந்து போராடி பெறுவதற்கு ஒன்பது கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்தத் தொகையை அரசிடமிருந்து பெறவும் இந்த அமைப்பு திட்டமிட்டுள்ளது.இதற்கிடையே, இரண்டு கைதிகளைக் கொடுமைப்படுத்தியது தொடர்பான வீடியோ ஒளிநாடாக்களை எரித்து விட்டதாக சி.ஐ.ஏ., தெரிவித்துள்ளது. இது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் எனக் கூறும் அம்ரீத் சிங், இன்னும் வெளியிடப்படாத ஆவணங்களையும் ஒப்படைக்கும் படி கூறி வாதாடி வருகிறார்.அமெரிக்கரைத் திருமணம் செய்து கொண்டுள்ள அம்ரீத் சிங்(40) யேல் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’