
2006 ஆம் ஆண்டில் வட அமெரிக்காவுக்கு பயணித்த ஒரு விமானத்தை வெடி வைத்து தகர்த்து அதிலிருந்தவர்களைக் கொல்ல சதி வேலையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டை உறுதிப்படுத்தி 3 பிரிட்டிஷ் முஸ்லிம் பிரஜைகளுக்கு எதிராக லண்டன் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
நீர்ம வெடிப்பொருட்களை குறைந்தது ஏழு விமானங்களுக்குள் அவர்கள் கடத்திக்கொண்டு செல்ல அவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சதித் திட்டம் அம்பலமாகியபோது விமானப் போக்குவரத்தில் பெரும் குழப்பம் எழுந்தது.
இச்சம்பவத்தின் விளைவாக பயணிகள் தம்முடன் விமானத்திற்குள் கொண்டுசெல்லும் பொருட்கள் தொடர்பில் இன்றளவும் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன.
இந்தச் சதி நடந்திருந்தால் அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னர் நடந்த மிக மோசமான பயங்கரவாதத் தாக்குதலாக இது இருந்திருக்கும் என்று விசாரணையாளர்கள் கூறுகின்றனர்.
இந்தச் சதியில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை எனத் தீர்ப்பளித்து பிரதிவாதிகள் வேறு நான்கு பேரை நீதிமன்றம் விடுவித்துள்ளது. மேலுமொருவர் மீது கொல்லச் சதி செய்தார் என்ற பொதுவான குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’