
மட்டக்களப்பு வாழைச்சேனை ஆலங்குளம் சந்தியில் 12.04.2009 அன்று கல்முனை இ.போ.ச.டிப்போவுக்குச் சொந்தமான பயணிகள் பஸ் எரிப்பு சம்பவம் தொடர்பாக நேற்று வாழைச்சேனை நீதிமன்றத்தில் நடைபெறவிருந்த அடையாள அணி வகுப்பு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த குறிப்பிட்ட பஸ் 12.03.2009 அன்று ஆலங்குளம் சந்தியில் ஆயுதம் தரித்த நபர்களினால் வழி மறித்து தீ வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக விடுதலைப் புலி உறுப்பினர்களான வாகனேரியைச் சேர்ந்த ஹரன் எனப்படும் பரமக்குட்டி சாமுவேல் முள்ளிவெட்டுவானைச் சேர்ந்த ராகுலன் எனப்படும் செல்லப்பா சிவானந்தன் மற்றும் கொண்டையன்கேணியைச் சேர்ந்த புகழேந்தி எனப்படும் கணபதிப்பிள்ளை அமரசிங்கம் ஆகியோரைச் சந்தேக நபர்களாக குறிப்பிட்டு வாழைச்சேனை நீதிமன்றத்தில் பொலிஸார் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்தனர். இதன் பிரகாரம் இதற்கான அடையாள அணி வகுப்பு நேற்று நடைபெறவிருந்தது. எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு அடையாள அணிவகுப்பை ஒத்தி வைத்த நீதிபதி ரி சரவணராஜா அது வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் தொடர்ந்தும் வைப்பதற்கான உத்தரவையும் பிறப்பித்தார். இதேவேளை வாழைச்சேனை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மற்றுமொரு அறிக்கையில் 19.03.2009 அன்று இரவு கிரான் பிரதேசத்திலுள்ள குளத்துமேடு என்னுமிடத்தில் முறுத்தானையைச் சேர்ந்த 27 வயதான தில்லையம்பலம் சாமித்தம்பி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகவும் . அன்றைய தினம் இதற்கான அடையாள அணிவகுப்பு நடைபெறுவதற்கான கட்டளையை நீதிபதி பிறப்பித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’