skip to main
|
skip to sidebar

விடுதலைப் புலிகளிடம் இருந்து வரக்கூடிய அச்சுறுத்தல் இன்னமும் 100 வீதமும் வெற்றி கொள்ளப்படவில்லை. அவர்கள், கிழக்கில் தாக்குதல்களை நடத்தக்கூடிய சாத்தியம் உண்டு. பொலிஸ்மா அதிபர் ஜெயந்த விக்கிரமரத்ன மேற்கண்டவாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொலிஸ் மா அதிபர் ஜெயந்த விக்கிரமரத்ன, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட கிழக்கை அண்டிய மின்னேரியாவில் பொலிஸ் நிலையம் ஒன்றை நேற்றுத் திறந்து வைத்தபோதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு பேசுகையில்,
விடுதலைப் புலிகளிடம் இருந்து வரக்கூடிய அச்சுறுத்தல் இன்னமும் 100 வீதமும் வெற்றி கொள்ளப்படவில்லை. மே மாதத்தில் விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களில் பலர் எஞ்சி உள்ளனர். இயங்குகின்றனர்.
குறிப்பாக இந்தப் பிரதேசங்களில் ஒழிந்து இருக்கிறார்கள். அவர்கள் சாதாரண வேலைகளில் ஈடுபடுவது போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தாக்குதல்களை நடத்தக்கூடிய சாத்தி யம் உண்டு.
விடுதலைப் புலிகள் அமைப்பின் எஞ்சியுள்ள உறுப்பினர்கள் இரகசியமான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் அச்சுறுத்தல் தொடர்கிறது. எனவே மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.
எனவே பொதுமக்கள் சட்டம் ஒழுங்கைப் பேண பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’