வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 26 ஆகஸ்ட், 2009

பணத்தைக் கொள்ளையிட முயன்ற பொலிஸ் உத்தியோகத்தரும் விமானப்படை வீரரும் கைது


துப்பாக்கி முனையில் பணத்தைக் கொள்ளையிட முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் விமானப்படை வீரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிமல் மெதிவக தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணியளவில் அநுராதபுரம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்றும் அவர் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:-
அநுராதபுரத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் வைப்புச் செய்வதற்காக பணத்தை எடுத்துச் சென்ற ஒருவரை துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தி அவரிடமிருந்த பணத்தைக் கொள்ளையிட முயன்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று, இரண்டு மகசீன்கள், துப்பாக்கி ரவைகள் 30 என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அநுராதபுரம் பொலிஸார் நடத்திய ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது சந்தேக நபர்களில் ஒருவர் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் எனவும் மற்றையவர் விமானப்படையில் கடமையாற்றுபவர் எனவும் தெரியவந்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’