-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
விஜய்காந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஜய்காந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 20 ஏப்ரல், 2012
வியாழன், 26 மே, 2011
விஜய்காந்துடன் சரத்குமார் மற்றும் நடிகைகள் சந்திப்பு!
எ திர்கட்சித் தலைவர் விஜய்காந்தை நடிகர் சங்கத் தலைவரும் எம்எல்ஏவுமான சரத்குமார் இன்று சந்தித்தார்.
அவருடன் நடிகர் சங்க நிர்வாகிகள் விஜயகுமார், நடிகைகள் நளினி, பாத்திமா பாபு உள்ளிட்டோரும் விஜயகாந்தை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின்போது, நடிகர் சங்க பிரச்சினைகள், திரையுலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக சரத்குமார் உள்ளிட்டோரிடம் பேசினார் விஜயகாந்த்.
அவருடன் நடிகர் சங்க நிர்வாகிகள் விஜயகுமார், நடிகைகள் நளினி, பாத்திமா பாபு உள்ளிட்டோரும் விஜயகாந்தை சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின்போது, நடிகர் சங்க பிரச்சினைகள், திரையுலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக சரத்குமார் உள்ளிட்டோரிடம் பேசினார் விஜயகாந்த்.
புதன், 30 மார்ச், 2011
ஞாயிறு, 15 நவம்பர், 2009
பொங்கலுக்கு கேப்டன் டிவி!

தொலைக்காட்சி ஆரம்பிக்கிறார் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த் என்பது கேள்விப்பட்ட செய்தி . இந்த தொலைக்காட்சி வருகிற பொங்கல் தினத்தன்று ஒளிபரப்பைத் துவங்குவது புதிய செய்தி.
இந்தத் தொலைக்காட்சிக்கு பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என பெரிய விளம்பரமெல்லாம் கொடுத்திருக்கிறார் விஜய்காந்த்.
இந்த தொலைக்காட்சி மட்டுமல்லாமல், புதிய பத்திரிகையும் துவங்குகிறாராம். இது வாரப் பத்திரிகையாக முதலில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நாளிதழாக மாறும் என்கிறது தேமுதிக வட்டாரம்.
ஏற்கெனவே மூன்று இணையதளங்களைத் துவங்கியுள்ளார் விஜய்காந்த் .
முன்பு தொலைல்காட்சிக்கு பேட்டியே தரமாட்டேன் என்று சபதமெல்லாம் செய்தவர்தான் கேப்டன். ஆனால், அரசியலும், காலத்தின் கட்டாயமும் அவரது சபதத்தை, புதிய தொலைக்காட்சி ஆரம்பிக்கும் அளவுக்கு மாற்றியிருக்கிறது.
செவ்வாய், 29 செப்டம்பர், 2009
விஜய்காந்த் இன்று உண்ணாவிரதம் : டில்லியில் விரிவான ஏற்பாடுகள்
இலங்கைக் கடற்படையினரால், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து, தே.மு.தி.க., தலைவர் விஜய்காந்த், டில்லியில் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்.இலங்கைத் தமிழர்கள் விவகாரம், கடந்த இரு வாரங்களாக தலைநகர் டில்லியை சூடேற்றி வருகிறது. இலங்கை முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை மீண்டும் அவரவர் இடங்களில் குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.,க்கள் கடந்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரைச் சந்தித்து முறையிட்டனர்.பார்லிமென்ட் எம்.பி.,க்கள் அடங்கிய குழுவை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்போது வலியுறுத்தியும், இந்த கோரிக்கை குறித்து இதுவரை, எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. மேலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென்றும், இந்தக் குழு வலியுறுத்தியது. ஆனால், இந்த சந்திப்புக்கு பிறகு தான், தமிழக மீனவர்கள் மீது மேலும் தாக்குதல்கள் அதிகமாக தொடர்ந்த வண்ணம் உள்ளது.
மீனவர்கள் பிரச்னையை முன்னிறுத்தி, விஜய்காந்த்தின் உண்ணா விரதம் இன்று டில்லியில் நடைபெறுகிறது. டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், காலை 9 மணிக்குத் துவங்கி மாலை வரை நடக்க உள்ள இந்த உண்ணாவிரத நிகழ்ச்சியில் பங்கேற்க, விஜய்காந்த், கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் டில்லி வந்துள்ளனர்.
இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தை மற்றவர்கள் எல்லாம் கையில் எடுத்த நிலையில், சற்று மாற்றமாக இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தை, விஜய்காந்த் கையில் எடுத்து டில்லியில் உண்ணாவிரதம் இருக்கவுள்ளார்.குஜராத் அருகே கடலில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கு பாகிஸ்தான் கடற்படையினரால் தாக்குதல் ஏதும் நடந்துவிடாமல் இந்திய கடற்படை பாதுகாப்பு தருகிறது. ஆனால், தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்துகின்றனர்.அப்போது மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பை இந்திய கடற்படை தருவதில்லை. இந்திய கடற்படை தமிழக மீனவர்களுக்கு ஏன் உரிய பாதுகாப்பை தருவதில்லை என்ற கேள்வியை, இதுவரை எந்தக் கட்சியும் எழுப்பாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





