வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
மாவை சேனாதிராஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மாவை சேனாதிராஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 12 அக்டோபர், 2012

வடக்கின் உண்மையான கருத்து, அபிலாஷைகளை வெளியிட ஆளுநரால் முடியாது: நீதிமன்றில் மாவை



ட மாகாணத்தின் உண்மையான கருத்துக்களையும் அபிலாஷைகளையும் முன்னுரிமை விருப்புகளையும் சரியாக வெளியிடுவதற்கு ஆளுநரால் இயலாது எனவும் அதற்கான தகுதி அவருக்கு இல்லை எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா உயர்நீதிமன்றில் இன்று தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

வியாழன், 28 ஜூன், 2012

கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானம்



கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அம்மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

புதன், 30 நவம்பர், 2011

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை குறித்து விவாதம் நடத்துமாறு மாவை சேனாதிராஜா எம்.பி. அழைப்பு


ற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து விவாதத்தை நடத்துமாறு நாடாளுமன்றத்தில் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

புதன், 10 ஆகஸ்ட், 2011

அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டு தாயகத்திலுள்ள இராணுவத்தினரை உடன் வாபஸ் பெற வேண்டும்: த.தே.கூ _


மிழினத்தை பூண்டோடு அழிப்பதற்கான நடவடிக்கை இராணுவத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்பதனால் அவசரகாலச் சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு தமிழர் தாயகத்திலுள்ள இராணுவத்தினரை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. யான மாவை சேனாதிராஜா வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்டம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

திங்கள், 18 ஜூலை, 2011

ஆடைகளை களைந்து மக்களை சுட்டுக்கொன்றவர்கள் வேட்டி, சேலை தருவதாக வாக்கு கேட்கின்றனர்: மாவை

டைகளைக் களைந்து மக்களை சுட்டுக் கொன்றவர்கள் இன்று வேட்டி, சேலை தருவதாக கூறி தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்கின்றனர். இன்று வடபகுதிக்கு அனை த்து அமைச்சர்களும் படையெடுத்து வந்து அபிவிருத்தி என்ற மாயையை காண்பித்து மக்களை ஏமாற்றுகின்றனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் எம். பி.யுமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

சனி, 24 ஏப்ரல், 2010

எழுத்துமூல அழைப்பு கிடைத்தால் அரசுடன் பேசத் தயார் : மாவை சேனாதிராஜா

அரசாங்கத்திடமிருந்து எழுத்துமூலமான அழைப்பு கிடைக்குமானால் தாம் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக உள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜா சற்றுமுன்னர்  இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.

வியாழன், 1 ஏப்ரல், 2010

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தடை : அரசுக்கு கூட்டமைப்பு பதிலடி

இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்ற அரசின் கருத்துக்குக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

சனி, 16 ஜனவரி, 2010

தமிழ் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை இந்தியா ஏற்றுள்ளது: புதுடில்லியில் வைத்து மாவை சேனாதிராஜா தெரிவிப்பு


வரும் ஜனாதிபதித் தேர்தல் மற்றும் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் போன்றவை தொடர்பான விடயங்களில் த.தே.கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவுகள், அணுகு முறைகள் போன்றவற்றை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. என த.தே.கூட்டமைப்பின் நா.உ மாவை சேனாதிராஜா நேற்று புதுடில்லியில் வைத்துத் தெரிவித்தார்.
நேற்று மாலை வரை இரண்டு நாள்கள் புதுடில்லியில் தங்கியிருந்து இந்திய அரசுத் தலைமையோடும், அதிகாரிகளோடும் பேச்சு நடத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவில் மாவை சேனாதிராஜாவும் ஒருவர். அவருடன் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் எம்.பிக்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் அந்தப் பேச்சுகளில் பங்குபற்றினர்.

நேற்று முன்தினம் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் நிருபமா ராவ் மற்றும் வெளியுறவுத்துறையின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்து விரிவான பேச்சுகளில் ஈடுபட்ட அக்குழுவினர் நேற்றும் இந்திய அரசின் உயர் வட்டாரங்களுடன் கலந்தாலோசனையில் ஈடுபடவிருந்தனர்.

இதுவரை இடம்பெற்ற சந்திப்புகள் குறித்து மாவை சேனாதிராஜா எம்.பி. நேற்று "உதயனு" க்குக் கூறியவை வருமாறு:

முக்கியமாக மூன்று விடயங்களை இந்தியத் தரப்புக்கு எடுத்துரைத்தோம். ஒன்று தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களோடு சேர்ந்து எடுத்த முடிவு, அதன் பின்புலம் போன்றவற்றை விளக்கினோம்.

அடுத்தது தற்போதைய அரசியல் கள நிலைவரம், தமிழ்மக்களின் எண்ணக் கருத்து, நிலைப்பாடுகள், எதிர்பார்ப்புகள், அபிலாஷைகள் என்பவற்றைக் கூறினோம்.

மூன்றாவது இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம், நீதி கிட்டுவதற்காக நாம் எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள், இலக்குகள், அதற்காக இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கும் ஒத்துழைப்பு ஆகியன.

இந்த விடயங்களை மிக்க கவனமாக செவிமடுத்த புதுடில்லித் தரப்பு, எங்களுடைய கருத்துகளை உள்வாங்கி ஏற்றுக்கொண்டுள்ளது.

மிகவும் ஆரோக்கியமானதாகவும், நம்பிக்கை தருவதாகவும் இந்தத் தொடர்பாடல் இடம்பெற்று வருகின்றமை குறித்து நாம் முழுத் திருப்தி அடைந்துள்ளோம்.

இன்று சனிக்கிழமை நாம் சென்னை திரும்பி, அடுத்த நாள் கொழும்பு செல்வோம். நாளை 17 ஆம் திகதிமுதல் வடக்கு, கிழக்கில் எமது தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முழு மூச்சாக ஒரு வாரத்துக்கு இடம்பெறும். கிழக்கில் முஸ்லிம் தரப்புடன் சேர்ந்து பிரசாரக் கூட்டங்களை நடத்தவும் உத்தேசித்துள்ளோம். வடக்கு, கிழக்குக்கு வெளியிலும் கொழும்பிலும் பிரசாரக் கூட்டங்களை நடத்துவது குறித்துப் பரிசீலித்து வருகின்றோம். என்றார் அவர்.

இதேநேரம், இலங்கையின் தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் ஆளும் தரப்பு வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள கையோடு, கூட்டமைப்பின் மூத்த தலைவர்களை அரசியல் பேச்சு நடத்துவதற்காக புதுடில்லி அழைத்தமை, இலங்கை அரசுத் தரப்புக்குக் காட்டப்பட்ட தவறான சமிஞ்ஞை என்ற சாரப்பட இவ்விடயத்தைக் கொழும்பு கவனத்தில் எடுத்திருப்பதாக சில வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும், இவ்விடயம் தொடர்பில் கொழும்புத் தரப்பில் இருந்து அத்தகைய உத்தியோகபூர்வ கருத்து வெளிப்பாடு ஏதும் இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.