வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 டிசம்பர், 2011

கிழக்கு மாகாண மக்களை எங்கோ இருந்து வந்த தலைமைகள் ஏமாற்றுவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம் :சந்திரகாந்தன்


தொடர்ந்து கிழக்கு மாகாண மக்களை எங்கோ இருந்து வந்த தலைமைகள் ஏமாற்றுவதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். கடந்த காலங்களில் கிழக்கிற்கான அரசியல் தலைமைத்துவம் அவர்களால் திட்டமிட்டு இல்லாது செய்யப்பட்டது என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

செவ்வாய், 29 நவம்பர், 2011

கிழக்கு மக்கள் வடக்குத் தலைமைகளுக்கு தலைகுனிந்தவர்களாக இருப்பது கவலைக்குரியது


கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களின் விகிதாசாரத்தை நோக்கினால் எந்தவொரு இனரீதியான கட்சியினாலும் தனித்து ஆட்சியமைக்க முடியாது. கிழக்கு மாகாணம் பல்வேறு புறக்கணிப்புகளை அனுபவித்தும் அதைப் புரியாதவர்கள் இன்னும் வடக்கு தலைமைகளுக்கு தலை குனிந்தவர்களாக இருப்பது கவலைக்குரியது என கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

வியாழன், 27 அக்டோபர், 2011

தமிழீழ பிரகடனம் 50 ஆயிரம் பொது மக்களை கொன்றழித்தது - பிள்ளையான்


1923ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட அந்த தமிழீழ பிரகடனம் முள்ளியவாய்க்காலில் 50 ஆயிரம் மக்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்,

திங்கள், 19 செப்டம்பர், 2011

கூட்டமைப்பும் புலம்பெயர் மேலாதிக்கத் தலைவர்களும் அடையமுடியாத தமிழீழத்தைப் பற்றி பேசுகிறார்கள்: சந்திரகாந்தன்


போராட்டத்திற்கு எந்தவொரு பங்களிப்புமே செய்யாத கூட்டமைப்பு எம்பிக்கள் மற்றும் வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்ற மேலாதிக்கத் தலைவர்கள் தான் தற்போது அடைய முடியாத இலக்காக இருக்கின்ற தமிழீழம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

கிரீஸ் மனிதன் என்ற மாயை தோற்றுவித்து அரசியல் இலாபம் : கிழக்கு முதல்வர்

ற்போது நாட்டின் பல பாகங்களிலும் கிரீஸ் மனிதன், மர்ம மனிதன் என்கின்ற ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டு குறித்த சில பிரதேசங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறான சூழலை சில அரசியல்வாதிகள் தங்களுக்குச் சாதகமாக்கி மக்களை மீண்டும் பீதியில் உறையச் செய்து வருகிறார்கள் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

சனி, 13 நவம்பர், 2010

மாநகர சபை உறுப்பினர் என்னை தாக்க முற்பட்டார்: முதலமைச்சர் வாக்குமூலம்

னக்கு விடுத்த அழைப்பின் பேரிலேயே நான் மட்டக்களப்பு மாநகர மேயரின் வாசஸ்தலத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு சென்றதாகவும் மாநகர சபை உறுப்பினர் ஆர்.பிரபாகரன் தன்னை தாக்க முற்பட்டதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் அதிகாரிகளுக்கு இன்று சனிக்கிழமை வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

திங்கள், 8 நவம்பர், 2010

'வடக்கு கிழக்கு இணைப்புக்காக தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணையவில்லை'

"தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றினைந்து குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணைந்ததே தவிர, மீண்டும் வடக்கு கிழக்கு இணைப்புக்கு சேரவில்லை" என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

ஞாயிறு, 31 அக்டோபர், 2010

கல்வியின் எழுச்சியானது கிராமப்புறங்களில் இருந்து தோன்றும் போதுதான் நாடும் மக்களும் முன்னேற்றமடைவார்கள் - இது மகாத்மாகாந்தியின் அற்புத வாக்கு.-கிழக்கு மாகாண முதலமைச்சர் .

ன்று வாகரை கோட்டக்கல்வி அதிகாரி திரு குணலிங்கம் தலைமையில் கோட்ட மட்டத்திலான பரிசளிப்பு விழா நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்

புதன், 27 அக்டோபர், 2010

கல்வியினை சீராக கற்பதற்கு சூழல் மிகவும் முக்கியமானதாகும்.-கிழக்கு மாகாண முதலமைச்சர்

திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் மாணவர் விடுதி இன்று கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் வீடுதலைப் புலிகளின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

புதன், 20 அக்டோபர், 2010

600 பொலிஸார் கொல்லப்பட்டமைக்கு கருணா தான் மன்னிப்பு கோர வேண்டும்:சந்திரகாந்தன்

1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளினால் கிழக்கு மாகாணத்தில் 600 பொலிஸார் பலவந்தமாக கொல்லப்பட்டமைக்கு விடுதலை புலிகளின் அப்போதைய கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணா அம்மானே மன்னிப்புக் கேட்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

அட்ஷய ஷேத்ரா நடாத்திய வாணி விழா நிகழ்வில் முதலமைச்சர் கலந்து சிறப்பிப்பு.

ட்ஷய ஷேத்ரா நடாத்திய வாணி விழா நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிப்பு.

திங்கள், 6 செப்டம்பர், 2010

கடத்தப்பட்ட மாநகரசபை உறுப்பினரின் வீட்டிற்கு முதலமைச்சர் சென்றார்.

டந்த மாதம் 23 ந் திகதி மட்டக்களப்பில் வைத்து கடத்தி செல்லப்பட்ட மட்டு மாநகர சபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணியின் வீட்டிற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்றுசென்றார்.

புதன், 1 செப்டம்பர், 2010

இந்திய வெளியுறவுச் செயலாளருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவ் இன்று கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ளார் புகைப்படம் இணைப்பு

புதன், 4 ஆகஸ்ட், 2010

த.தே.கூட்டமைப்பின் செயற்பாடு காலத்தையுணர்ந்ததல்ல : சந்திரகாந்தன்

றுபது வருடங்களுக்கு முன்பு பேசியதையே மீண்டும் மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பேசிவருகின்றனர். இது காலத்தினையுணர்ந்த செயற்பாடல்ல என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

செவ்வாய், 27 ஜூலை, 2010

வாகரைப்பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை இருந்த இடத்தினை முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பார்வையிட்டார்.(படங்கள் இணைப்பு)


நேற்று வாகரைப்பிரதேசத்தில் மிகப் பழமைவாய்ந்த புராதன காலத்து அம்மன் சிலை ஒன்று மலையடிவாரத்தில் கண்டெடுக்கப்பட்டது. அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு இன்று நேரில் சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவ்விடத்தினை நேரில் சென்று பார்வையிட்டார்.

சனி, 17 ஜூலை, 2010

முல்லைத்தீவு மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுடன் கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் கலந்துரையாடல்

நேற்று கிளிநொச்சியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற அமைச்சரவைக்குழுக் கூட்டத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனும் கலந்துகொண்டார்.

திங்கள், 12 ஜூலை, 2010

கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அம்பாறை மாவட்ட தமிழர் பேரவைக்கான கலாச்சாரா மண்டபம் கல்முனையில்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்ரில் இடம் பெற்ற தமிழர் பேரவை கலாச்சாரா மண்டபத்தினை அமைப்பது தொடர்பான கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியன் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் முதற்கட்டமாக கல்முனையில் அமைக்கப்பட இருக்கின்ற தமிழர் பேரவை கலாச்சார மண்டபத்திற்கு 3கோடி ருபாய் நிதியினை தனது அடுத்தாண்டு செயற்றிட்டத்தின் மூலம் ஒதுக்கீடு செய்துள்ளார்.

நாவிதன்வெளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட காணியில் அமைக்கப்பட இருக்கின்ற கலாச்சார மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளர் த.கலையரசன் தலைமையில் இடம் பெற்றது.

நாவிதன்வெளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட காணியில் அமைக்கப்பட இருக்கின்ற கலாச்சார மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளர் த.கலையரசன் தலைமையில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது விசேட உரையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்

வெள்ளி, 9 ஜூலை, 2010

உகண கணிஸ்ட்ட வித்தயாலயத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் விஜயம்

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள உகண கணிஸ்ட்ட வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ்  மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் விஜயம் செய்தார்.

வெள்ளி, 2 ஜூலை, 2010

இணைந்த சமூகம் பிணைந்து நின்றால் எதனையும் சாதிக்கலாம்- முதல்வர் சந்திரகாந்தன்.

தமிழர், முஸ்லிம், சிஙகளவர் என்ற பாகுபாடுகளை கடந்து எமது சமூகம் ஒற்றுமையாக இணைந்து செயற்பட்டால் நாம் எதனையும் சாதிக்கலாம் என கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.