வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 20 டிசம்பர், 2011

புலிகள் அமைப்பையும் தமிழர்களையும் குற்றம் சாட்டுகிறது ஆணைக்குழு அறிக்கை: கஜேந்திரகுமார்


மிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் தமிழர்களையும் குற்றம் சாட்டும் விதத்திலேயே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்துள்ளது. இதனை சர்வதேசம் கருத்தில் எடுக்காது சர்வதேச விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

திங்கள், 1 மார்ச், 2010

அ. இ. தமிழ்க் காங்கிரஸ் இடைக்கால தலைவராக பிரான்சிஸ் வின்சன் டி போல் நியமனம்:கஜேந்திரகுமார்


அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தமது பதவியில் இருந்தும் கட்சியின் உறுப்புரிமையில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் இவ் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கடந்த மாதம் 21 ஆம் திகதி அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக தலைவர் என்ற வகையில் ராஜினாமாக் கடிதத்தை எனக்கு சமர்ப்பித்திருந்தார். ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம், யாப்புக்கு அமைவாக உப தலைவர் பிரான்சிஸ் வின்சன் டி போல் தலைமையில் இடம்பெற்றது.

செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஏகமனதாக அவருடைய ராஜினாமாக் கடிதத்தை ஏற்றுக் கொண்டதுடன் கட்சியில் இருந்து விலக்குவது என்ற முடிவையும் மேற் கொண்டுள்ளார்கள்.

அடுத்து பொதுச் சபைக் கூட்டம் நடைபெறும்வரை இடைக்காலத் தலைவராக பிரான்சிஸ் வின்சன் டி போலைத் தொடர்ந்து இயங்க அனுமதிப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

திங்கள், 22 பிப்ரவரி, 2010

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்,தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகியுள்ளது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்


அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய மூன்று கட்சிகளுடன் இனிவரும் காலத்தில் இணைந்து செயற்படாது என அறிவித்துள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்


தமிழ் தேசியக் கூட்டமைப்பு 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 2004 ம் ஆண்டு அது செயற்பட்ட அடிப்படையில் இருந்து விலகிச்சென்றதன் காரணமாகவே இந்த முடிவை தாம் கடந்த வெள்ளிக்கிழமையன்று மேற்கொண்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தாம் விரைவில் அறிவிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தகவல் தொடர்பாக தாம் எவ்வித கருத்தையும் வெளியிடமுடியாது என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அடிப்படையில் விநாயகமூர்த்திக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற தேசியப் பட்டியலை ஒதுக்கியுள்ளமையே இதற்கான காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விடயம் தொடர்பாக எமது செய்திசேவை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் மாவை சேனாதிராஜாவை தொடர்புகொண்டு கேட்டபோது, அவ்வாறு எதுவும் நடக்கவில்லை எனக்குறிப்பிட்டார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவ்வாறான தகவலை வெளியிட்டிருந்தாலும் அவரை மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைத்து செயற்பட தாம் நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.