கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் மேற்படி புத்தக விற்பனை நிலையத்தை இன்று பகல் ஆரம்பித்து வைத்தார். யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் முதலாவது விற்பனை நிலையம் இது என்பதுடன் மேற்படி பிரசுர வெளியீடுகளைப் பெற்றுக்கொள்வதில் இவ்வளவு காலமும் நிலவி வந்த சிரமங்கள் இதன்மூலம் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளமை முக்கிய விடயமாகும்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் அவர்கள் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் மேலதிக புத்தக விற்பனை நிலையத்தை நாடா வெட்டி திறந்து வைத்ததுடன் அவருடன் அந்நிலையத்திற்கு விஜயம் செய்த சமூகசேவைகள் மற்றும் சமூகநலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தகவல் ஊடக அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா ஆகியோருடன் இணைந்து மங்கல விளக்கேற்றி நிலையத்தின் நடவடிக்கைகளையும் ஆரம்பித்து வைத்தனர். மேலும் அந்நிலையத்தில் பணிபுரிய இளைஞன் ஒருவருக்கும் யுவதி ஒருவருக்கும் நியமனக்கடிதத்தை வழங்கிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் அவர்கள் அவ்விருவரையும் பணியில் நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கும்படியும் பணிப்புரை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.






0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’