இரானில் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தடுத்து வைக்கப்பட்ட போது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டியமை தொடர்பாக சர்ச்சைக்குரிய அதிபர் தேர்தலின் எதிர்க்கட்சி வேட்பாளரானமெஃதி கறோபி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக இரானின் அரச வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு மதகுருவான கறோபி அவர்களுக்கு எதிராக மதகுருமார்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் பொறுப்புமிக்க சிறப்பு அலுவலகத்தில் அரச வழக்கறிஞர்கள் வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.
அரசாங்கம் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியதே ஒழிய, விசயத்தை நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லவில்லை.
இந்த சட்ட நடவடிக்கை தம்மை மேலும் வாயடைக்கச் செய்யும் செயல் என்று எதிர்க்கட்சிகளால் பார்க்கப்படுகின்றது.



0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’