யாழ் பொது நூலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் யாழ் மாவட்டத்தின் அரச திணைக்கள அதிகாரிகள் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் சமயத்தலைவர்கள் கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் வர்த்தகர்சங்கப் பிரதிநிதிகள் யாழ். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் ஆகியோரைச் சந்தித்து அவர்களின் கருத்துக்கள் பிரச்சினைகள் குறித்து தமிழக பாராளுமன்ற தூதுக்குழுவினர் கேட்டறிந்து கொண்டனர். இந்தச் சந்திப்பையடுத்து நிவாரணக் கிராமங்களில் இருந்து அண்மையில் அழைத்து வரப்பட்டு யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்களையும் அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடினார்கள்.
மேற்படி சந்திப்பின்போது யாழ். மாநகர முதல்வராக தெரிவுசெய்யப்பட்ட திருமதி யோகேஸ்வரி தமிழக முதல்வர் கலைஞரின் மகளும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினருமாகிய கனிமொழிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவமளித்தமை குறிப்பிடத்தக்கது.


















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’