வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 13 அக்டோபர், 2009

பிரபாகரன் அழிக்கப்பட்டிருக்காவிட்டால் சிறிலங்கா பெரும் சிக்கலை எதிர்கொண்டிருக்கும்: சிறிலங்கா தரைப்படைத் தளபதி


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டிருக்கவில்லை எனில் சிறிலங்காவின் எதிர்காலம் சிக்கலானதாக மாறி இருக்கும் எனத் தெரிவித்திருக்கிறார் தரைப் படைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய.

“எமது படையினர் கடற்படை மற்றும் வான் படையினருடன் இணைந்து பிரபாகரனை அழித்து விடவில்லை எனில், நீங்கள் புரிந்து வைத்திருப்பது போன்றே நாட்டின் எதிர்காலம் மிகச் சிக்கலானதாக மாறி இருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை” என்றார் தரைப் படைத் தளபதி.

சிறிலங்கா தரைப் படையின் 60 ஆவது ஆண்டு விழாக் கொண்டாட்டத்திற்கு வழங்கிய செய்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தரைப்படையின் வைர விழாக் கொண்டாட்டங்களை ஒட்டி பண்டாராநாயக்க நினைவு மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆயுதக் கண்காட்சி பற்றி அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் தளபதி.

படையினரின் திறமையைப் பறைசாற்றுவதற்காக மட்டுமன்றி தீவிரவாதம் ஏற்படுத்திய இரத்தக்களரியான துன்பங்களில் இருந்து மீண்ட மகிழ்ச்சியை மக்கள் கொண்டாடுவதற்காகவும்தான் என்றார் அவர்.

போர் முடிவடைந்துவிட்ட போதும் சிறிலங்கா தரைப்படையினர் தாய்நாட்டின் மீது கொண்டுள்ள பொறுப்புணர்வு முடிவடைந்து விடவில்லை. இந்தத் தருணத்தில் எமது முன்னுரிமைக்குரிய பணிகள், இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவதும் அபிவிருத்திக்கு உதவுவதும் தான்.

பொறுப்புணர்வுடனும் அமைதியுடனும் வாழ்வதற்கு ஏற்ற சூழலை எதிர்காலத்தில் இந்த நாட்டில் உருவாக்குவது நம் அனைவரதும் கடமை என்று தரைப் படைத் தளபதி மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’