வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 24 அக்டோபர், 2009

யாழ்.பாஷையூர் கடற்தொழிலாளர்கள் கடலட்டை பிடிக்கச் சென்ற சமயம் அவர்களின் கைகளில் வலம்புரிச் சங்கு சிக்கியுள்ளது.


கடந்த வாரம் குடாக்கடல் நீரேரியிலுள்ள கல்முனைப் பிரதேசத்தில் கடலட்டை பிடிக்கச் சென்ற சமயம் வலம்புரிச் சங்கு கிடைத்துள்ளது. இத்தகைய வலம்புரிச் சங்குகள் ஆழ்கடல் பிரதேசங்களிலேயே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் குடாக்கடல் நீர் ஏரியில் வலம்புரிச் சங்கு கிடைத்துள்ளது. பாஷையூர் கடற்தொழிலாளர்களிடம் அகப்பட்ட வலம்புரிச் சங்கு 21 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடற்தொழிலிற்குச் சென்ற 07 கடற்தொழிலாளர்களும் தலா 3 லட்சம் ரூபா வீதம் அத்தொகையைப் பங்கிட்டுக் கொண்டதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’