வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

வடக்கின் வசந்தம் செயலணி குழு மாநாடு இன்று யாழ் நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது

வடக்கின் வசந்தம் செயலணி குழு மாநாட்டில் தென்மராட்சிப் பிரதேச அபிவிருத்திக்கென வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் 6.4 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். 

யாழ் நூலக கேட்போர் கூடத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற வடக்கின் வசந்தம் செயலணிக் குழுவின் மாநாட்டிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கைக்கு இணங்க சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட விளையாட்டு மைதானம், மயானம் மற்றும் ஏனைய இதர அபிவிருத்திகளுக்கென வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற வடக்கின் வசந்தம் செயலணிக் குழுவின் மாநாட்டில் யாழ் அரச அதிபர் கே. கணேஷ்ட உட்பட அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் திணைக்களங்கள் பிரதேச செயலர்கள் பொலிஸ் அதிகாரிகள் இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தற்போது வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் துரித அபிவிருத்தி மற்றும் மேம்பாடுகள் தொடர்பாகவும் அரச மற்றும் அரச சார்பற்ற அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’