வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 17 செப்டம்பர், 2009

மிரிகானை, பாணந்துறை பகுதிகளில் சுற்றிவளைப்பு தேடுதல்

மிரிகானை மற்றும் பாணந்துறை பிரதேசங்களில் பொலிஸாரால் நடத்தப்பட்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல்களில் ஆறு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அவர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு துப்பாக்கிகளும் அதற்கான ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் கூறியதாவது
மிரிகானை பொலிஸின் குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவினரால் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது துப்பாக்கிகளுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டள்ளனர். இவர்கள் இங்கிரியா, பட்டுகம்பல, மாதல போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’