வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 28 செப்டம்பர், 2009

ஐ.நா. கூட்டத் தொடரில் பாதுகாப்புசெயலர் கோத்தபாயவும் பங்கேற்பு


அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகளின் 64 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் கலந்துகொண்டுள்ள இலங்கை தூதுக்குழுவில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் கலந்துகொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 64 ஆவது கூட்டத் தொடர் கடந்தவாரம் ஆரம்பமானது. இதில் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் தலைமையிலான தூதுக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம மற்றும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட சிலர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட பிரதிநிதி கலாநிதி பாலித்த கோஹனவும் இந்தக்குழுவில் இடம்பெற்றுள்ளார். ஐ.நா. வின் பொதுச் சபை கூட்டத்தில் கடந்த சனிக்கிழமை பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க உரையாற்றியிருந்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’