-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
வியாழன், 17 செப்டம்பர், 2009
தமிழ்மொழியையும் இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டுமென்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் பா.உ கனிமொழி வேண்டுகோள்
தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டுமென்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் தமிழக முதல்வரின் மகளும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு விழாவில் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியவை வருமாறு, கிரேக்க, ரோம கால நாணயங்களில் அரசர்களின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. நம் நாட்டில் சங்க காலத்தில்கூட நாணயங்களில் உருவப்படங்கள் பொறிப்பதுஅரிதாக இருந்தது. ஆனால் இன்று அண்ணா நூற்றாண்டு நிறைவின்போது அவரின் உருவம் பொறித்த நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டு சிறப்பித்துள்ளது. 1963ம் ஆண்டு 16வது சட்டத்திருத்தம் கொண்டுவந்த அதேமத்திய அரசு இன்று அண்ணாவின் உருவம் பொறித்த நாணத்தை வெளியிடட்டுள்ளது. இது மத்திய மாநில அரசுகளிடையே ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இரு அரசுகளின் நல்லுறவுக்கு கிடைத்த வெற்றியாகும். தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டுமென்று அப்போதே அண்ணா கூறியிருந்தார். ஆனால் இன்றுவரை அது நிறைவேற்றபடவில்லை. அதை நிறைவேற்றித் தர மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் கோரிக்கை முன்வைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’