-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
சனி, 19 செப்டம்பர், 2009
இலங்கையில் ஆபாசக் காட்சிகளில் நடித்த இளைஞர், யுவதிகளின் புகைப்படங்களை பத்திரகைகளில் வெளியிடுவதற்கு கொழும்பு நீதவான் உத்தரவு!
இலங்கையில் ஆபாசப்படங்கள் எடுப்பதற்கு உதவிய, ஆபாசக் காட்சிகளில் நடித்த இளைஞர், யுவதிகளின் புகைப்படங்களை பத்திரகைகளில் வெளியிடுவதற்கு கொழும்பு மேலதிக நீதவான் சிறுவர் மகளிர் பிரிவு பொலீசாருக்கு அனுமதி வழங்கியுள்ளார். இவர்கள் நடித்த ஆபாசப் படங்களின் இறுவெட்டுகள் தற்போது சந்தையில் விற்பனையாவதால் அவர்களை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அவர்களின் படங்களை வெளியிட வேண்டுமென்று பொலீசார் நீதிமன்றில் கோரியிருந்தனர். இந்த ஆபாசப்படங்கள் உள்ள இறுவட்டுகள் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகளவுக்கு வி;ற்பனையாவதாக பொலீசார் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். இதனால் இந்த படங்களில் நடித்த ஆண் பெண்களின் புகைப்படங்களை பத்திரகைகளில் பிரசுரித்து வெளியிட வேண்டுமென்றும் பொலீசார் கோரியிருந்தனர். பொலீசாரின் விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்த நீதவான், அதற்கு அனுமதி வழங்கியதுடன் மேலதிக விசாரணையை அக்டோபர் 29ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார். இதேவேளை இந்த ஆபாசப் படங்களில் நடித்த சிலர் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்று விட்டதாகவும் பொலீசார் கூறியுள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’