-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
திங்கள், 14 செப்டம்பர், 2009
புலம் பெயர் தமிழர்களும் பயந்தார் விஜய்!!!
நடிகர் விஜர் அரசியல் பிரவேசம் குறித்து, சென்னை ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று மனம் திறந்துள்ளார்.கடந்த சில தினக்களாகவே எந்த பத்திரிகையை திறந்தாலும் எனது அரசியல் பிரவேசம் பற்றிய செய்தி தான் முதலில் நிற்கிறது. உண்மையை சொன்னால் நான் அந்தளவுக்கு பெரிய ஆள் கிடையாது.சினிமா தன எனக்கு முக்கியம். அரசியல் பிரவேசம் குறித்து முடிவேதும் எடுக்கவில்லை.
ராகுலை சந்தித்து நான் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை. ராகுலை சந்தித்த போது அவர் என்னை வரவேற்ற விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நானும், காங்கிரஸும் இளைஞர்களை அணுகுவதில் ஒரே அணுகுமுறையை தான் வைத்துள்ளோம். அவரை டெல்லியில் சந்தித்த போது எனது திரைப்படங்கள், நான் செய்து வரும் மக்கள் பணிகளை பற்றித்தான் பேசினார். அரசியல் பற்றியும் பேசினோம். ஆனால் அதை இப்போது சொல்வது நாகரீகமாக இருக்காது.தற்போது எனது மக்கள் இயக்கத்தை பலப்படுத்துவேன். இதற்காக நான் களம் இறங்கி போராடவும் தயார். தமிழக ரசிகர்கள் என்றால் எனக்கு உயிர். தமிழக ரசிகர்கள் எனக்கு கடவுள் கொடுத்த பரிசு. மக்களுக்காக நன்மை செய்யும் அரசியல் கட்சியுடன் கைகோர்ப்பேன். தி.மு.க பெரிதா, காங்கிரஸ் பெரிதா என்று சொல்லக்கூடிய அளவிற்கு எனக்கு அரசியல் தெரியாது. அரசியலில் சேருவது குறித்து நான் பிற்காலத்தில் முடிவு செய்வேன். எதிர் காலத்தில் அரசியலுக்கு வர வாய்ப்புள்ளது. தமிழகத் தமிழர்களையும், உலகத் தமிழர்களையும் கலந்து ஆலோசித்துவிட்டு செய்தியாளர்களாகிய உங்கள் கருத்தறிந்த பின்னர்தான் அரசியலுக்கு வருவேன்.தொலைநோக்கி பார்வையோடு ஒரு வளமான, வலிமையான அரசாங்கத்தை உருவாக்க எந்த கட்சி முனைகிறதோ அவர்களோடு நான் கைகோர்ப்பது பற்றி முடிவு எடுப்பேன். வாழ்க தமிழ்.. வெல்க பாரதம் என்றார் விஜய்.அண்மையில் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்ட காங். பொதுச்செயலர் ராகுல் நிருபர்களிடம் பேசுகையில் நடிகர் விஜய் கட்சியில் சேருவாரா என கேட்டதற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். காங்., கதவு திறந்திருக்கிறது என கூறியிருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய் சென்னையில் இன்று ( 13 ம் தேதி ) அரசியல் சேருது எப்போது என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’