வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 1 மே, 2010

திருப்பதியில் மொட்டை போட்டு தர்ணா செய்த மனோரமா


திருப்பதி: திருமலையில் நேற்று மொட்டை போட்டு சாமி தரிசனம் செய்த மனோரமா, தனக்கு சிறப்பு விருந்தினர் மாளிகை தரப்படாததைக் கண்டித்து தர்ணா செய்தார்.

'மிஸ் இந்தியாவாக' மும்பை பெண் மானஸ்வி தேர்வு!

மும்பை: 2010ம் ஆண்டுக்கான 'பெமினா பான்டலூன் மிஸ் இந்தியா' அழகியாக மும்பை யைச் சேர்ந்த மானஸ்வி மம்கய் (22) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் நடக்கவுள்ள உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பில் இவர் பங்கேற்பார்.

நடிகர் அஜீ்த்துக்கு இன்று 40வது பிறந்தநாள்.


பொதுவாக பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர் அஜீத். குறிப்பாக ரசிகர்கள் இதையொட்டி பெரும் செலவு செய்ய வேண்டாம் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

பொதுத்தோ்தலில் தமிழ் மக்கள் வழங்கிய ஜனநாயகத் தீர்ப்பு மதிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட வேண்டும் : சம்பந்தன் வலியுறுத்தல்

இலங்கையில் ஜனநாயக ஆட்சி இருக்கின்றது என்றால்- கடந்த பொதுத்தேர்தலில் மக்களால் தெற்கில் தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக அரசாங்கம் பதவியில் இருக்கின்றது என்றால்-
கடந்த பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் அளித்த ஜனநாயகத் தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட வேண்டும். இவ்வாறு இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வாணியம்பபடி விபத்தில் ஐவர் பலி


வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருக்கும் ஒரு தோல் பதனிடும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமையன்று நச்சுவாயு தாக்கி ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

எண்ணெய் கசிவு கரையை அடைந்தது








கசிவை கட்டுப்படுத்த அமெரிக்கா பல முயற்சிகளை செய்து வருகிறது
கசிவை கட்டுப்படுத்த அமெரிக்கா பல முயற்சிகளை செய்து வருகிறது

அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடா கடல் பகுதியில் கடலில் கசிந்துவரும் எண்ணெய் லுயிசியானா மாகாணக் கடலோரப் பகுதிகளில் கரை ஒதுங்க ஆரம்பித்துள்ளது.

புதுடில்லி தாக்கப்படலாம் என எச்சரிக்கை

புதுடில்லியில் உள்ள முக்கிய மார்க்கெட் பகுதிகளில் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புக்களை நடத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அப்படியான பகுதிகளுக்கு செல்வதை தங்கள் நாட்டவர்கள் தவிர்க்க வேண்டும் என்று பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை-தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்யும்


சென்னை யின் தென் கிழக்கே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இதனால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டின் சில பகுதியில் லேசான மழை யோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நித்யானந்தாவி்ன் சிஷ்யை நித்ய கோபிகா எங்கே?


நித்யானந்தா செக்ஸ் விவகாரத்தில் நித்ய கோபிகா என்ற பெண்ணை சிஐடி போலீசார் தேடி வருகின்றனர்.
பிடுதி ஆசிரமத்தில் அதிகார மையமாக செயல்பட்டு வந்த இவர் தான்

புலிகளின் சர்வதேச வலையமைப்பை இல்லாதொழிக்க விசேட புலனாய்வு நடவடிக்கை எடுக்கப்படும் - பாதுகாப்புச் செயலாளர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை இல்லாதொழிப்பதற்கு விசேட புலனாய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களை ஈர்ப்பதில் பிரிட்டிஷ் பிரதமர் தோல்வி


பிரிட்டனில் நடந்த நேரடி தொலைக்காட்சி விவாதத்தின்போது பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுன், வாக்காளர்களை ஈர்க்கத் தவறி விட்டதாக விவாதத்திற்குப் பின்னர் நடத்தப்பட்ட கருத்து கணிப்பு கூறியது. முக்கிய எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் டேவிட் கெமரான் இந்த விவாதத்தில் முதல் இடத்தை தட்டிச் சென்றார்.

உங்களுக்கு தெரியுமா?




சில விஷயங்கள் ஆஹா! அப்படியா என்று வியக்கத் தோன்றும். ஏனென்றால் நாம் தொடர்ந்து தினந்தோறும் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருப்போம். ஆனால் அவற்றில் இந்த விஷயங்கள் இருக்கின்றன என்று தெரியாது. யாராவது அதனைச் சுட்டிக் காட்டுகையில் வியந்து போகிறோம். அப்படிப்பட்ட சில தகவல்களை இங்கு காணலாம்.

யுத்தத்தின் பெறுபேறு : கிழக்கில் மட்டும் 49000 விதவைகள்

யுத்தம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் 49 ஆயிரம் பெண்கள் தமது கணவர்களை இழந்துள்ளதுடன் இவர்களில் 25 ஆயிரம் பேர் 25 வயதுக்கும் குறைவான பெண்கள் என தெரியவருகிறது.

தமிழர்களின் உரிமையும், உயிரும் பரிட்சித்துப் பார்ப்பதற்கு, விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களல்ல!!! -அருகன்.



நாடு கடந்த “அரசு” என்பது ஒரு அமைப்பேயன்றி அரசாக முடியாது! பல் தேசத்தில் உருவாக்கப்படும் அமைப்புக்களின் ஒன்றியமாகத் தலைமைச் செயலகம் செயற்படலாமே ஒழிய ஒரு அரசாகச் செயற்பட முடியாது. இதற்கு எந்த நாட்டிலும், எந்த மனித உரிமை சட்டத்திலும், அல்லது எந்த நாடுகளின் கூட்டமைப்பிலும் இடம் இல்லை!

ஜெனரல் பொன்சேகா ஊடகவியலாளர்களை சந்திக்கவுள்ளார்..!

வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற அமர்வுக்காக வருகை தரவுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக் கொள்வார் என ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித தெரிவித்துள்ளார்.

ஊடகத்துறை சமநிலை அடைய வேண்டும் -ஊடக பிரதியமைச்சர் மேர்வின் சில்வா!

யார் என்ன சொன்னாலும் தன்னை ஊடகத்தறை பிரதி அமைச்சராக தெரிவு செய்தமைக்கு ஜனாதிபதி ம‘pந்த ராஜபக்ஷ நன்றி தெரிவிப்பதாக ஊடகத்துறை பிரதியமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்

சுவிஸில் மீண்டும் ஏமாற்றுப் பேர்வழி சுரேஸ்.. தமிழ் தேச மக்களே உசார்!! (வீடியோ)



தனது ஊர் மக்களுக்கு உதவப் போவதாக கூறிக்கொண்டு ஓர் அமைப்பைத் தொடங்கி சுவிஸ்வாழ் மக்களிடம் காசுகளை கறந்து (இவருடன் இன்னும் சிலரும் இணைந்து) தங்களுடைய சுயதேவைகளை நிறைவேற்றி வருகின்றமை, “மேல் மருவத்தூர் அம்மன் கோயில்” என்ற ஒரு கோயிலை நிலம் வாங்கி தான் சுவிஸில் அமைக்கப் போவதாக சொல்லி பல இலட்சம் பிறாங்குகளை சுவிஸ்வாழ் தமிழர்களிடமிருந்து சேகரித்து அந்த பணத்தை முழுமையாக ஏப்பம் விட்டமை.

அரசியல் தஞ்சம் கோரி மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 75 இலங்கையர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

அரசியல் தஞ்சம் கோரிய 75 இலங்கையர்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் பொருட்டு அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பகுதிக்கு மலேசியாவுக்கான பிரதி இலங்கை உயர்ஸ்தானிகர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

யாழ்.பருத்தித்துறை கொழும்புக்கிடையிலான பஸ் சேவை ஆரம்பம் _

யாழ். பருத்தித்துறையிலிருந்து கொழும்புக்கான நேரடி பஸ் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பருத்தித்துறை இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போ முகாமையாளர் மு. குலவால் செல்வம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பேச்சுக்கு வருமாறு இந்திய தூதுவர் அழைப்பு

கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ் மக்களின் அதிக வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நல்லெண்ணச் சந்திப்பு ஒன்றை நடத்த இந்தியத் தரப்பு அழைப்பு விடுத்துள்ளது.

தடுமாறிய நிலையில் கொக்குவில் இந்துக் கல்லூரி அணி. அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தவித்து நிற்கின்றது.

இந்துக்களின் போர் என அழைக்கப்படும் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்குமிடையிலான மட்டுப்படுத்தப்படாத இரண்டு நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியின் இன்றைய இரண்டாவது நாள் ஆட்டம் காலை 9 மணிக்கு கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

முல்லை கிளிநொச்சியில் மருத்துவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரல்!

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றுவதற்கு ஓய்வுபெற்ற மருத்துவர்கள் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தனியார்துறை தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் பெரும் பங்கு வகிப்பவர்கள் - அமைச்சர் காமினி லொக்குகே

சம்பள நிர்ணய சபையில் அங்கம் வகிக்கும் தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தை 20 முதல் 45 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தொழிலுறவுகள் திறன் அபிவிருத்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

ஈ.பி.டி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அவர்களது மேதினச் செய்தி!

சுமார் முப்பது வருடங்களின் பின்னர் எமது நாட்டில் சுமுகமானதொரு சூழ்நிலையில் இம்முறை உலக உழைக்கும் மக்களின் உரிமைக்கான தினத்தைக் கொண்டாட கிடைத்துள்ளமையையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.

அவசரகாலச் சட்டம், பொன்சேகா விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவலை

இலங்கையில் அவசரகாலச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பது மற்றும் ஜெனரல் சரத் பொன்சேகாவை இராணுவ காவலில் வைத்துள்ளமை ஆகியன குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது. ஆனாலும், இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவது ஒன்றியத்தின் நோக்கமல்ல என்று ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுத் தலைவர் பேர்னாட் செவேஜ் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றுவது இலங்கையை பொறுத்தவிடயம்.

அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டு இழந்து போன உரிமைகளை பெற்றுக்கொள்ள உழைப்பவர் தினத்தில் உறுதிகொள்வோம்!...

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் மேதின அறைகூவல்!

தனது மோசடிகளை மறைப்பதற்காக பிறர் மீது சேறுபூசும் உதயன் சரவணபவன்

தனது மோசடிகள் அம்பலத்திற்கு வருவதைத் தடுப்பதற்காகவும் அவை பற்றிய மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவும் உதயன் சரவணபவன் உண்மைக்குப் புறம்பான செய்திகளை மீண்டும் மீண்டும் வெளியிட்டு வருகிறார்.

தயாமாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை

பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த புலிகள் அமைப்பின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தயாமாஸ்டர் மற்றும் ஜோர்ஜ் மாஸ்டர் குறித்து தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக இரகசியப் பொலீசார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். இவர்கள் குறித்த மனு கொழும்பு மேல்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் ஜோர்ஜ் மாஸ்டர் மற்றும் தயாமாஸ்டர் ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

யாழ்.பொதுமக்களின் காணிகளிலிருந்து படையினர் விரைவில் வெளியேறுவர்-பாதுகாப்பு செயலாளர்

யாழ்.குடாநாட்டில் பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் மற்றும் கட்டிடங்க ளில் தங்கியிருக்கும் இராணுவத்தினர் அவற்றிலிருந்து வெகு விரைவில் வெளியே றுவதுடன் அவற்றை உரிமையாளர்களிடம் உடன் கையளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு தரப்பு உயரதிகாரிகளுடன் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாதுகாப்பு செயலாளர் மேலும் கூறினார்.

வவுனியா நிவாரண கிராமத்தில் கருணாவுக்கு வரவேற்பு: எஞ்சியுள்ளவர்கள் விரைவில் மீள்குடியேற்றம்

அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டதன் பின்னர் முதல்முறையாக வவுனியா நிவாரணக் கிராமத்திற்கு நேற்று விஜயம் செய்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா அம்மானை) மிகுந்த மகிழ்ச்சியுடன் கண்ணீர் மல்க வரவேற்றனர்.

சகல சவால்களையும் வெல்ல உழைக்கும் மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்-ஜனாதிபதி

பயங்கரவாதத்தினால் தடைப்பட்டிருந்த சகல அபிவிருத்தி மார்க்கங்களும் இன்று எமது நாட்டு மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளன. இலங்கையின் உழைக்கும் மக்கள் இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினத்தை நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான சூழ்நிலை குறித்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள மேதின வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

காங்கிரசில் இணைகிறார் குஷ்பு

இனி பயந்து பயந்து மியாவ்...னு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சொல்ல வந்த விஷயத்தை சுரீர்ன்னு சொல்ல ஒரு பேக் ரவுண்டை அமைத்துக் கொண்டிருக்கிறார் குஷ்பு.
அநாதை குழந்தைக்குதான் அங்கங்கே அடிவிழும். அரசியலில் சேர்ந்திட்டா?

படப்பிடிப்பில் பாரதிராஜா அடிப்பார் என்று பயந்தேன் : அஞ்சலி

'அங்காடி தெரு' படத்துக்கு பின் பிசியான நடிகையாகியுள்ளார் அஞ்சலி. தொடர்ந்து 'இரட்டைச்சுழி' படமும் ரிலீசாகியுள்ளது. இதில் இயக்குனர்கள் பாலச்சந்தர், பாரதிராஜாவுடன் நடித்துள்ளார்.

இந்திய அணிக்கு அதிர்ச்சியளிப்போம் : ஆப்கான் பயிற்சியாளர்

இந்திய அணிக்கு உள்ள அருமை பெருமைகளைக் கண்டு தங்கள் அணி அசரப்போவதில்லை என்றும் முதல் போட்டியில் இந்தியாவிற்கு அதிர்ச்சியளிக்கத் தயாராகி வருகிறோம் என்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கபீர் கான் தெரிவித்துள்ளார்.

வெள்ளி, 30 ஏப்ரல், 2010

ஆறுமுகன் தொண்டமான் திங்கட் கிழமையன்று பதவியேற்பார்? _

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஆறுமுகன் தொண்டமான் எதிர்வரும் திங்கட்கிழமையன்று அமைச்சுப் பதவி ஏற்கவுள்ளாரெனத் தெரியவருவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மலையக மே தினத்தில் கூட்டங்களைத் தவிர்த்து நிகழ்வுகள்


மலையகத் தொழிற்சங்கங்கள் பல, இம்முறை மேதினக் கூட்டங்களைத் தவிர்த்து மேதின நிகழ்வுகளைத் தோட்டவாரியாக நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன.
இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் மேதின ஊர்வலமும் கூட்டமும் அதன் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் தலவாக்கலை நகரில் இடம் பெறவுள்ளது.

'மனிதன் வாழ மாடுகள் தேவை'



 

மனிதன் வாழ மாடுகள் தேவை
மனிதன் வாழ மாடுகள் தேவை
மனித சமூகம் நீண்ட நாட்களுக்கு வாழ வேண்டுமானால் மாடு வளர்ப்பிலும் மிகுந்த அக்கறை செலுத்தப்பட வேண்டும் என்று மேற்கு ஆப்பிரிக்காவில் வறட்சியை சமாளிக்க உதவுகின்ற உதவி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

பிரபாகரன் தாயார் -நீதிமன்றத் தீர்ப்பு

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் இந்தியா வந்து சிகிச்சை பெற விரும்புவதாகத் தெரிவித்தால், அது குறித்து மத்திய அரசு முடிவு தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

நித்யானந்தா: பெண்கள் சிறையில் அடைப்பு!


நான் ஆண் அல்ல என்று தன்னை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி போலீசாரிடம் நித்யானந்தா வாக்குமூலம் அளித்து அதிர்ச்சி தந்துள்ளார்.
கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட நித்தியானந்தாவை போலீஸ் காவலில் எடுத்து கர்நாடக சிஐடி போலீசார் விசாரித்து வந்தனர் Read: In English

யாழ். பொது நூலகம் கணனி மயம்; வட மாகாண ஆளுநர் தெரிவிப்பு


ஏனைய பொது நூலகங்களுடன் தக வல்களை பரிமாற்றங்களை இலகுவாக மேற்கொள்ளும் வகையில் யாழ். பொது நூலகம் முழுமையாக கணனி மயப் படுத்தப்படவுள்ளது என வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

சிறைச்சாலை செயற்பாடுகளில் அரசியல் அழுத்தங்கள் பழிவாங்கல்களுக்கு இடமளிக்கப்போவதில்லை - அமைச்சர் டியூ குணசேகர


புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் பத்தாயிரம் பேருக்குப் புனர்வாழ்வு அளிப்பதும் சிறைச்சாலைகளை மறுசீரமைப்பதும் தமது முக்கிய பணியாகுமென்று புனர்வாழ்வு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

வன்னி படைவீரர் நினைவுத் தூபி ஆனையிறவில் இன்று அங்குரார்ப்பணம்


வன்னிப் படைவீரர் நினைவுத் தூபி ஆனையிறவில் இன்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புக்கும் எமக்கும் உள்ள உறவில் எந்த விரிசலும் இல்லை.- தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் - சி;சந்திரகாந்தன்

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத்தேர்தலிலே எமது கட்சியின் உயர்மட்டம் கேட்டுக்கொண்டதற்கிணங்கவே நாம் தனித்து போட்டியிட்டோம். இதனால் எமக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிற்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இதில் எவ்வித உண்மையும் இல்லை.

120 பெண்களுடன் உறவு கொண்டேன்- டைகர் உட்ஸ் பகீர் தகவல்


மெல்போர்ன்: கடந்த ஐந்து வருடத்தில், 120 பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்ததாக கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் உட்ஸுக்கும், அவரது மனைவி எலின் நார்டெக்ரனுக்கும் இடையிலான திருமண உறவு முறிவது உறுதியாகி விட்டது.

75 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு பஸ் நிலையம் அமைக்கப்படவுள்ளது.


கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய, “மஹிந்த சிந்தனை கிழக்கின் உதயம்” நெக்டெப் வேலைத்திட்டத்தின் கீழ் 75மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம் மீள் அமைக்கப்படவுள்ளது.

மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணைக்குழு வரவேற்புத் தெரிவித்துள்ளது


இலங்கையின் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் தமிழ் - சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு இடைநிறுத்தப்பட்டிருந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணைக்குழு வரவேற்புத் தெரிவித்துள்ளது.

நாடு திரும்பினார் ஜனாதிபதி _

பூட்டானின் திம்பு நகரில் நடைபெற்ற 16 ஆவது சார்க் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்றிருந்த ஜனாதிபதி, இன்று நண்பகல் 12:00 மணியளவில் நாடு திரும்பினார் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

சரத் பொன்சேகாவின் காணிக்கு செல்ல அனோமாவுக்கு தடை!


இராணுவ சேவைக்காக மேஜர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட காணிக்கு செல்ல, அவரது உறவினர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
யுத்த வெற்றியைத் தொடர்ந்து அதனை கொண்டாடும் முகாமாக சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கத்தினால் கொழும்பு நாரஹென்பிட்டியில் 20 பேர்ச்சஸ் காணிப்பரப்பு சன்மானமாக வழங்கப்பட்டது.

புதிய அரசமைப்பு மாற்றங்கள் டிசம்பரில் நிறைவுறும்

எதிர்வரும் டிசம்பர் மாதத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள புதிய அரசியலமைப்பு மாற்றங்கள் பெரும்பாலும் நிறைவு பெற்றுவிடும். இது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்று பிரதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.